கோவேக்சினுக்கு திடீர் தடை.! உலக சுகாதார அமைப்பு போட்ட அதிரடி உத்தரவு.. அச்சச்சோ..?

By Raghupati R  |  First Published Apr 4, 2022, 6:58 AM IST

கோவேக்­சின் தடுப்பூசி சக்திவாய்ந்ததுதான், பாதுகாப்பு பிரச்னை ஏதுமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கோவேக்­சின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், அந்த மருந்தின் சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.


கோவேக்­சின் தடுப்பூசி :

ஐக்­கிய நாடு­கள் சபை மூலம் பல்வேறு நாடு­க­ளுக்கு கோவேக்­சின் தடுப்­பூசி மருந்து விநி­யோ­கம் செய்­யப்­பட்டு வந்­தது. அதை தற்­கா­லி­க­மாக நிறுத்­து­வ­தாக சனிக்கிழமை ஐநாவின் சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு இதை நேற்று முன்தினம் உறுதி செய்தது. இதற்கு உற்பத்தி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இருப்பினும் அந்த மருந்தின் வீரியம், தரம் குறித்து எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று ஐநா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. கோவேக்சின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எவ்விதக் கருத்தையும் கூறாமல் கோவேக்சின் உற்பத்தியைக் குறைப்பதாகவும், உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தரத்திற்கேற்ப உற்பத்தி முறையில் மாற்றம் செய்யப்போவதாகவும் அது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்த முடிவு :

பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தில் அண்­மை­யில் உலக சுகா­தார நிறு­வ­னம் ஆய்வு மேற்­கொண்­டது. ஆய்­வுக்­குப் பின், அந்த மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் வச­தி­களை மேம்­ப­டுத்­த­வும் தயாரிப்புத்துறையில் பற்­றாக்கு­றை­க­ளைச் சரி செய்­ய­வும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அத­னை­ய­டுத்து ஐநா சபை, அதன் மூலம் கோவேக்­சின் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­வதை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்க முடிவு செய்­துள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அவ்­வாறு விநி­யோ­கம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­ட­தற்கு, அம்­மருந்­தின் செயல்­தி­றன் மற்­றும் பாது­காப்பு அம்­சங்­கள் கார­ணம் இல்லை என்று பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் தற்­போது கோவி­ஷீல்டு மற்­றும் கோவேக்­சின் ஆகிய இரண்டு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வின் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம், ஐசி­எம்­ஆர், இந்­தி­யன் கிரு­மி­யி­யல் நிறு­வ­னம் ஆகி­யவை இணைந்து கொரோனா தொற்­றுக்கு எதி­ராக கோவேக்­சின் தடுப்­பூசி மருந்தை உரு­வாக்­கின. கோவேக்­சின் தடுப்­பூசி, டெல்டா போன்ற மர­பணு உரு­மா­றிய கொரோனா தொற்­றுக்கு எதி­ராக சிறப்­பாக செயல்­ப­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த தேசிய சுகா­தார ஆய்வு நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதையும் படிங்க : சீனாவில் கட்டுக்குள் அடங்காத கொரோனா.. உலக அளவில் அதிகரிக்கும் பாதிப்பு.. மறுபடியும் முதல்ல இருந்தா ?

click me!