ரஷ்யாவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது தடுப்பூசி..!! அடித்து தூள் கிளப்பும் விளாடிமிர் புடின்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2020, 12:07 PM IST
Highlights

இது ரஷ்யாவின் செயற்கைக்கோளில் பெயராகும். இந்த தடுப்பூசி மூலம் covid-19 க்கு எதிராக நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது விரைவில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது. உலக அளவில் 2.74 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8. 96 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் 1.95 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கொரோனா தொற்று ரஷ்யாவில் வேகமாக பரவிய நிலையில். அது நாளடைவில் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் அந்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

வைரஸை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், அது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டிவந்த ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்ததாக அறிவித்தது. அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா வைரஸின் முதல் தடுப்பூசியை தனது நாடு உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். மேலும் தனது மகளுக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார். அந்த தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது ரஷ்யாவின் செயற்கைக்கோளில் பெயராகும். இந்த தடுப்பூசி மூலம் covid-19 க்கு எதிராக நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்பூட்னிக்-வி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பிராந்திய அடிப்படையில் அது விநியோகிக்கப்படும் என்றும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியகமான கமலாயா தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி, புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான தர பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

click me!