பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட் துறையில் மட்டுமில்லாமல் இந்திய திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கார் விபத்தில் பலியான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46வது வயதில் கார் விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தார். ஆஸ்திலேலியாவில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான டவுன்ஸ்வில்லில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒருதின போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,
இந்திய திரைப்படத்தில் சைமண்ட்ஸ்
கிரிக்கெட் துறையில் மட்டுமே ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தெரிந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவரைப்பற்றி தெரியாத பல சம்பவங்களும் உள்ளன, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட்டை தாண்டி, இந்திய பாலிவுட்டுடனும் நிறைய தொடர்புகளை வைத்திருந்தார் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அக்ஷய் குமார், அனுஷ்கா ஷர்மா, ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா நடித்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'பாட்டியாலா ஹவுஸ்' திரைப்படத்தில் சைமண்ட்ஸ் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரராகவே சைமண்ட்ஸ் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டே ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மீண்டும் இந்தியத் திரைகளுக்குத் திரும்பினார், ஆனால் திரைப்படத்திற்காக படத்திற்காக அல்ல. மாறாக, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் அதிகமாக காணப்பட்டார். சல்மான் கானின் ரியாலிட்டி டிவி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சைமண்ட்ஸ். சல்மான் மற்றும் சஞ்சய் தத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருந்தார்.
பிபாஷாவுடன் நடனம் ஆடிய சைமண்ட்ஸ்
அடுத்த ஆண்டு, 2013 இல், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்குடன் மீண்டும் ஒருமுறை இந்திய தொலைக்காட்சித் திரைகளில் தோன்றினார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். பாலிவுட் திவா பிபாஷா பாசுவுடன்இணைந்து நடனம் ஆடி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதையும் படியுங்கள்
கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்...! நண்பனை இழந்து தவிக்கிறோம்... கிரிக்கெட் வீரர்கள் வேதனை...