அமெரிக்காவுக்கு நடந்தது நியாபகம் இருக்கா..? பாகிஸ்தானை அலற விடும் தாலிபான்கள்..! பகிரங்க மிரட்டல்..!

Published : Nov 19, 2025, 08:19 AM IST
Taliban

சுருக்கம்

தாலிபான் ஆட்சியை வலுப்படுத்த எனது உயிரைத் தியாகம் செய்யத் தயார். தேவைப்பட்டால் மூத்த தாலிபான் தலைவர்கள் தற்கொலை குண்டுதாரிகளாகத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள் என அவர் கூறினார்.

பதற்றங்களுக்கு இடையே, ஆப்கானிஸ்தான் தாலிபான் அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு இராணுவ அணிவகுப்பில், பாகிஸ்தானுடன் போர் நடந்தால், நான் முதல் தற்கொலை குண்டு வைத்துக் கொள்வேன் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அந்த ஆப்கானிஸ்தான் தாலிபான் சிறப்புப் படை அதிகாரி பாகிஸ்தானை எச்சரித்தார். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் தாலிபான் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இரு நாடுகளும் ஒரு வார காலமாக நேரடியாக இராணுவ மோதலில் ஈடுபட்டன. இதில் இரு தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தாலிபான் அதிகாரி இராணுவ அணிவகுப்பின் போது பாகிஸ்தான் தலிபான்களுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். தாலிபான் ஆட்சியை வலுப்படுத்த தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும், அதை தியாகச் செயல் என்றும் அவர் கூறினார். இந்த அதிகாரி ஃபடாய் பயிற்சியாளர் என்று கூறப்படுகிறார். தேவைப்பட்டால் மூத்த தாலிபான் தலைவர்கள் தற்கொலை குண்டுதாரிகளாகத் தாக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் பாகிஸ்தான் விமானப்படை காபூல், ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே பதற்றங்கள் வெடித்தன. இந்தத் தாக்குதல்கள் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் இந்தியா வருகையால் நடைபெற்றதாக கூறப்பட்டது. தலிபான் அதிகாரி ஒருவர் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வருகை இது. பாகிஸ்தான் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், துராந்த் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினர்.

தாலிபான் வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான இராணுவ மோதல் வெடித்தது. தாக்குதலில் 59 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் கூறினர். ஆனாலும், 29 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் ஒப்புக்கொண்டது. ஒரு வார கால மோதலின் போது, ​​ஆப்கானிஸ்தானின் காந்தஹார், பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் ஆப்கான் தாலிபான், டிடிபி உடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனாலும், பாகிஸ்தான் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதாகவும், ஏராளமான பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தலிபான்கள் கூறினர்.

இறுதியாக, அக்டோபர் 19 அன்று கத்தார், துருக்கியின் மத்தியில் இரு தரப்பினருக்கும் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தரப்பினர் துருக்கியின் இஸ்தான்புல்லில் சந்தித்தனர். ஆனால் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் இருந்தன. இருப்பினும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு உறுதியுடன் உள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்