இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தினர். அப்போது, ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கை எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள வன்முறையின் போது கடுமையாக தாக்கப்பட்டதாலேயே ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
undefined
இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தினர். அப்போது, ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கை எம்.பி. கொலை
ஆனால், தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவரை தாக்கியதால் அச்சமடைந்த எம்.பி. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையில், இறந்த எம்.பி. அமரக்கீர்த்தியின் பிரதே பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழக்கவில்லை, போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.