
வெளிநாடுகளில் வாழும் இலங்கை குடிக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை அனுப்ப வேண்டும். மக்களுக்கு உணவு வாங்கவும், எரிபொருளா வாங்கவும் அந்தநிதியைப் பயன்படுத்துவோம் என்று இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதாரச் சிக்கலால் அரிசி, கோதுமையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால்தான் இந்த விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கூடஇலங்கை அரசிடம் அன்னியச் செலாவணி கையிருப்பும் இல்லை.
இதனால் இந்தியாவி்டம் நிதியுதவி கோரியதைத் தொடர்ந்து, ஏற்கெனவே 100 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்கியிருந்தது தவிர்த்து 100 கோடி டாலருக்கு தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், டீசல், பெட்ரோல் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து ஏற்கெனவே டீசல் கப்பலில் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர உணவுப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாகக் கூறி அதிபர் கோத்தய ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.
5100 கோடி வெளிநாட்டுக் கடன் இருப்பதால் அதை இப்போதைக்கு திருப்பிச் செலுத்த முடியாது. இயல்புநிலைக்கு பொருளாதாரம் திரும்பியதும் செலுத்துகிறோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியி்ன் கவர்னர் நந்தலால் வீரசிங்கே வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “ கடினமான நேரத்தில் தேசத்துக்கு உதவுங்கள். இப்போதுள்ள நிலையில் அந்நியச் செலவாணி தேவைப்படுகிறது
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை மக்கள் நன்கொடை வழங்குவதற்காக தனியாக வங்கிக்கணக்கு அங்கு தொடங்கப்படும். பிரிட்டன், ஜெர்மனியில் இருக்கும் இலங்கை மக்களும் தாராளமாக உதவ வேண்டும். இலங்கை மக்கள் அனுப்பும் பணம் மக்களின் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் மட்டும்தான் பயன்படும் என்பதை உறுதியளிக்கிறேன். குறிப்பாக உணவு, எரிபொருள், மருந்துகள் வாங்க மட்டும்தான் பயன்படும் என்பதற்கு உறுதியளி்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு ஏறக்குறைய திவால் நிலைக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டதால், 20 கோடி டாலர் வட்டி செலுத்துவது சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு செலவிடப்படும்.