Sri Lanka Crisis: வீரியமெடுக்கும் மக்கள் போராட்டம்.. இதுவரை 664 பேர் கைது.. இலங்கையில் பதற்றம்..

By Thanalakshmi V  |  First Published Apr 3, 2022, 6:23 PM IST

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்டித்து அதிபர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் வியாழக்கிழமை இரவு அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டிற்கு முன்பு மக்கள் போராடத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஒரு பேருந்து ஜீப் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில், 5 பெண்கள் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து இலங்கை முழுவதும் அசசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக கோத்தபய ராஜபக்சே வெள்ளிகிழமை இரவு அறிவித்தார்.பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் அத்தியாவசியமான பொருட்களை மக்களுக்கு தடையின்றி கொண்டு சேர்க்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அதனையடுத்து, நாடு தழுவிய அளவில் இன்று மக்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்படுள்ளதாக தகவல் வெளியான நிலையில் , 36 மணி நேர ஊரடங்கை அரசு அறிவித்தது. சனிகிழமை இரவு 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

 இந்நிலையில் ஊரடங்கை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கு மகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளனர். இச்சூழலில், இலங்கையில் வடக்கு, தெற்கு, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை அனைத்து பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே இலங்கையில் மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 18.7 % ஆகவும் உணவுப் பணவீக்கம் 30.2% ஆகவும் இருந்தது.இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை 2020 ஆம் ஆண்டில் 5 % ஆக இருந்த நிலை 2021 ல் 15% ஆக அதிகரித்துள்ளது. 2021 நிதியாண்டில் மூன்றாவது காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 1.5% ஆக இருந்தது.

மேலும் உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் இல்லாததால் பெரும்பாலான இடங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் போட்டு செல்கின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடம் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. மேலும் சர்வதேச நிதியத்திடமும் கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது.நிலக்கரி, டீசல் உள்ளிட்ட எரிபொருள் குறைவால், மின் உற்பத்தி வெகுமாக குறைந்தள்ளது. இதனால் இலங்களில் ஒரு நாளைக்கு 13 மணி  நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

click me!