‘சூப்பர்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. இந்தத் தீவு விலைக்கு வந்தபோது அதை கிறிஸ்டினா வாங்கிவிட்டார். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் எனப் பெண்களுக்குத் தேவையான அம்சங்கள் விடுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.
பின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கென பிரத்யேகமான சுற்றுலா விடுதி செயல்பட்டுவருகிறது.
இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் என்பவர் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார். ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் கணவர்களைப் பிரிந்து சில நாட்கள் மகிழ்ச்சியாக கழிக்க வெளியூர் செல்வார்களே பெண்கள், அதுபோல ஆண்களின் தொந்தரவு இன்றி, தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்களுக்காக இதைத் தொடங்கியிருக்கிறார்கள். இது பெண்கள் மட்டுமே சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி.
‘சூப்பர்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. இந்தத் தீவு விலைக்கு வந்தபோது அதை கிறிஸ்டினா வாங்கிவிட்டார். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் எனப் பெண்களுக்குத் தேவையான அம்சங்கள் விடுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.
‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்துவருகிறார் கிறிஸ்டினா. பின்லாந்தில் பால் பேதம் பார்க்கக் கூடாது என்பதைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். ஆனால், பால் பேதம் இருக்கக் கூடாது என்று சொல்கிற தேசத்தில் இது தேவையா என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.