சீனாவின் குறுக்கு புத்தி, பொய், பித்தலாட்டாங்களை ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்த ஸ்பெய்ன் தலைவர்

By karthikeyan VFirst Published Apr 12, 2020, 8:59 PM IST
Highlights

கொரோனா விவகாரத்தில் சீனா வேண்டுமென்றே உலக நாடுகளை சிக்கலில் சிக்கவைத்துள்ளதாக ஸ்பெய்னை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினருமான ஹெர்மன் டெர்ட்ஸ் பகிரமங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், சீனாவைவிட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் 18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா உருவான சீனாவில் வெறும் 82 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 3300 பேர் மட்டுமே இறந்திருப்பதாகவும் அந்நாடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை சீனா குறைத்து காட்டுவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. கொரோனா குறித்த சரியான முன்னெச்சரிக்கைகளை சீனா கொடுக்காததால் உலகமே சிக்கலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா உருவான சீனாவின் வூஹான் நகரில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறி, அந்நகரில் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. 

ஆனால் உலகமே சமூக, பொருளாதார ரீதியாக பேரழிவை சந்தித்திருப்பதற்கு சீனா தான் காரணம் என பலரும் குற்றம்சாட்டிவரும் நிலையில், சீனாவின் அலட்சியம் தான் அனைத்திற்கு காரணம் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரும், கொரோனாவால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளருமான ஹெர்மான் டெர்ட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெர்மான், சீனாவிற்கு நவம்பர் மாதமே கொரோனா பாதிப்பு குறித்து தெரியவந்துவிட்டது. அப்போதே அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் உலக நாடுகளையும் எச்சரிக்காமல், வேண்டுமென்றே பேசாமல் மௌனம் காத்து உலகத்தையே சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கும் பொருளாதார பேரழிவுக்கும் சீனா தான் காரணம்.

கொரோனாவால் வரவிருக்கும் பேரழிவை உணர்ந்து அதை தடுக்காமல் அலட்சியமாக இருந்து உலக நாடுகளை மட்டுமல்லாது சொந்த மக்களையே சிதைத்துள்ளது சீனா. கொரோனா உருவான ஆரம்பத்திலேயே உலக சுகாதார அமைப்பும் அமெரிக்கா நோய் தடுப்பு மையமும் வல்லுநர்களை சீனாவிற்கு அனுப்ப உத்தேசித்தன. ஆனால் கொரோனாவால் எந்த பிரச்னையும் இல்லை. நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறிவிட்டு, உலகத்திற்கே கொரோனாவை சீனா பரப்பிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவில் வெறும் 3300 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருப்பதாக சீன கம்யூனிஸ்ட் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையாகவே அங்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும். அங்கிருக்கும் மருத்துவமனைகள் 45 ஆயிரம் அஸ்திக்கலங்களை ஆர்டர் செய்துள்ளன. அதனடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக 40 ஆயிரம் பேர் சீனாவில் கொரோனாவிற்கு பலியாகியிருப்பார்கள். ஆனால் சீனா, வெறும் 3300 என்று பொய் கூறுகிறது. 

சீன அரசின் நேர்மையின்மையை வெளிக்கொண்டுவர வேண்டிய சீன ஊடகங்களும் அரசுடன் கைகோர்த்து பொய்யான தகவல்களையே வெளியிடுகின்றன. அமெரிக்காவும் பிரிட்டனும் இந்த விவகாரத்தை பயாலஜிக்கல் ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சீனா, டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது. ஸ்பெய்னுக்கும் குரோஷியாவுக்கும் சீனா வழங்கிய மாஸ்க்குகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டையும் ஹெர்மன் முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டிக் டாக்கின் பேரண்ட் கம்பெனி லீக் செய்த, உத்தி தொடர்பான ஒரு ஆவணம், சீனாவிற்கு வெளியே பதிவிடப்படும் பதிவுகளை சீனா தணிக்கை செய்வதை பட்டவர்த்தனப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அந்த அப்ளிகேஷனின் மூலம் சீனா தவறான பொய் பிரச்சாரங்களையும் செய்துள்ளது. ஐரோப்பாவிற்கு சீன மருத்துவர்கள் சென்றார்கள் என்றும் இத்தாலியில் வீடுகளின் பால்கனியில் நின்று சீனாவின் தேசிய கீதத்தை இத்தாலி மக்கள் பாடினார்கள் என்பன போன்ற பொய்யான தகவல்களை அந்த அப்ளிகேஷனின் மூலம் பரப்புகிறது என்றும் ஹெர்மன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அறிவுசார் சொத்துக்களையும் சீனா திருடுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் ஹார்மன். அதுகுறித்து பேசிய ஹெர்மன் டெர்ட்ஸ், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம்,  சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, அமெரிக்காவின் T-mobile உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துக்களை சீனாவின் தொலை தொடர்பு நிறுவனங்கள் திருடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தொழில்துறை நாசவேலைகளில் சீனா ஈடுபடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபி திருடப்படுவதாகக்கூட குற்றச்சாட்டு உள்ளது. சிஎன்பிசி நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், அமெரிக்காவில் ஐந்தில் ஒரு நிறுவனம், தங்களது அறிவுசார் சொத்தை சீனா திருடுவதாக குற்றம்சாட்டுவது தெரியவந்துள்ளதாகவும் ஹெர்மன் தெரிவித்துள்ளார். 

click me!