இயற்கையாகவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவது மிகவும் ஒழுக்கக் கேடானது என்வும், அதை அடைவது முற்றிலும் சாத்தியமற்றது என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருமுறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த வைரஸ் தாக்குமா? ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னர் அவர் எவ்வளவு காலம் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருப்பார் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களால் எந்த ஒரு ஒரு திடமான பதிலையும் கொடுக்க முடியாத நிலையே இருந்த வந்தது, ஆனால் தற்போது இந்த வைரஸ் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் சில வாரங்களிலேயே மறைந்துவிடும் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸால் மிக லேசாக பாதிக்கப்பட்டவர்கள் அதாவது கொரோனா தொற்றில் சிறிய அறிகுறிகள் மட்டுமே தென்பட்டவர்களுக்குக்கூட நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது ஆனால் அது சில வாரங்களுக்குள்ளாகவே மறைந்துவிடுகிறது என்பதை விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.
எனவே அத்தகைய நபர்கள் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 14% பேரிடம் ஆன்ட்டிபயாட்டிக் இருப்பது தெரியவந்தது ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் உடலில் எந்த ஆன்டிபாடிகளும் தென்படவில்லை, தற்போதைய இந்த ஆய்வின் முடிவு லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவர்களில் ஒருவரான ஸ்பெயினில் கார்லோஸ்-3 சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் யோட்டி கூறுகையில், கொரோனா வைரஸால் உருவாகின்ற நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கக் கூடியதாக இல்லை, அது தற்காலிகமானதாகவே இருக்கிறது. அதனால் ஏற்படுகின்ற ஆன்டிபாடி உடலில் குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது. பின்னர் அது மறைந்து போகக்கூடியதைப் பார்க்க முடிகிறது. எனவே நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தொற்று அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் ஆன்டிபாடிகள் உருவாவதில்லை என்பதற்கு ஏற்கனவே நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்தின் வைராலஜி பேராசிரியர் இயன் ஜோன்ஸ் கொரோனா ஆன்டிபாடிகள் சோதனைகளில் நேர்மறையாக காணப்படுபவர்கள் இப்போதே பாதுகாப்பு இருப்பதாக கருதமுடியாது என எச்சரிக்கிறார். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களில் 5.2 சதவீதம் பேர் ஆன்டிபாடிகள் பெற்றுள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தரவின் அடிப்படையில் கொரோனாவுக்கு எதிராக மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அடைய முடியாது என்பதையும் இது காட்டுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஜெனிவாவின் வளர்ந்து வரும் வைரஸ் நோய்களுக்கான மையத்தின் தலைவரும் ஜெனிவா பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுமான பெஞ்சமின் மேயர், இயற்கையாகவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவது மிகவும் ஒழுக்கக் கேடானது என்வும், அதை அடைவது முற்றிலும் சாத்தியமற்றது என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.