
கனடா கிழக்கு கடற்கரைப் பகுதியான நியூபவுண்ட் லாந்து பகுதியில் 150 அடி உயர பனிப்பாறை தானாக திடீரென தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த அதிசயத்தை பொது மக்கள் பரவசத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்
கனாடாவின் கிழற்கு கடைற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிகளுக்கு இடையில் ஒவ்வொரு கோடைக்காலம் - குளிர்காலத்திற்கு இடையிலான வசந்த காலத்தின்போது ஆர்ட்டிக் கடல் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிப்பாறைகள் நகர்ந்து வரும்.
பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் மிகவும் சிறிய அளவிலான பனிப்பாறைகள் வெளியில் தெரியும்.தற்போது இந்த சீசனின் தொடக்கத்தில் பெர்ரிலேன்ட் கடற்பகுதியில் 150 அடி உயரத்திலான ராட்சத பனிப்றை நகர்ந்து வந்துள்ளது.
இது அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் அருகில்உள்ளதால், அவர்கள் தங்களது கேமராவிற்குள் பனிப்பாறையை படம் பிடித்து வருகிறார்கள்.
அருகில் உள்ள கிராமத்திற்கும் இச்செய்தி பரவியதால், அப்பகுதி சுற்றுலாத் தளம் போல் மாறியுள்ளது.
கடந்த ஆண்டு 387 பனிப்பாறைகள் இதுபோன்று நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 616 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துள்ளன. .
பொதுவாக தோன்றும் பனிப்பாறை நீரில் மிதந்து அப்படியேசென்றுவிடும். ஆனால், இந்த பனிப்பாறை தரையுடன் சேர்ந்து அப்படியே நின்று கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது,.