சிங்கப்பூர் ஜூரோங் பகுதியில் விபத்து.. காருக்குள் சிக்கிய மூவரை காப்பாற்ற ஒன்றுகூடிய 20 பேர் - என்ன நடந்தது?

By Ansgar R  |  First Published Sep 2, 2023, 10:42 PM IST

சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் நடந்த விபத்தைத் தொடர்ந்து, காருக்குள் சிக்கிய 3 பேரை காப்பாற்ற அங்கு 20க்கும் அதிகமான மக்கள் கூடியது பலரது பாராட்டுகளை பெற்று வருகின்றது.


சிங்கப்பூர் ஜூரோங் பகுதி போலீசார் அளித்த தகவலின்படி பொலிஸாரின், இரவு 10:30 மணியளவில் பிளாக் 245 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 24ல், இரண்டு வேன்கள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர், இணையத்தில் வெளியான புகைப்படத்தில், நடைபாதையில் ஒரு சாம்பல் நிற வேன் அதன் வலதுபுறம் சாய்ந்து கிடப்பதை பார்க்கமுடிந்தது. 

இந்த விபத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் அளித்த தகவலின்படி, அவர் அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது, திடீரென பலமாக ​​​​பிரேக் அடிக்கப்பட்ட சத்தம் கேட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார். சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து பார்த்தபோது ஒரு சாம்பல் நிற வேன் வலது புறம் சாய்ந்து, எதிர் நின்றுகொண்டிருந்த ஒரு கார் மீது மோதி நின்றிருப்பதை கண்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

உடனே அக்கம்பக்கத்தில் இருந்த சுமார் 20 பேர் உடனடியாக அந்த கவிழ்ந்த காருக்குள் இருந்த 3 நபர்களை காப்பாற்ற அங்கு விரைந்ததாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அளித்த தகவலின்படி, அந்த வண்டிக்குள் இருந்த ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது என்றும். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டார் என்றும் கூறியுள்ளது.

அந்த வாகனத்தை இயக்கிய 22 வயது பெண் ஓட்டுனரிடம் தற்போது விசாரணை நடந்து வருகின்றது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் ஆனார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்.. மாபெரும் வெற்றி !!

click me!