ரஷ்ய அதிபர் புதின் ஒரு சைக்கோ.. விமர்சித்த மாடல் அழகி சூட்கேஸில் சடலமாக மீட்பு.. கொலை செய்தது யார்?

Published : Mar 16, 2022, 09:31 PM IST
ரஷ்ய அதிபர் புதின் ஒரு சைக்கோ.. விமர்சித்த மாடல் அழகி சூட்கேஸில் சடலமாக மீட்பு.. கொலை செய்தது யார்?

சுருக்கம்

அடுத்து சில மாதங்களிலேயே சமூக வலைதளங்களில் கிரெட்டா எந்தப் பதிவையும் போடாமல், அவருடைய பக்கம் சைலண்டாக இருந்தது.  கிரெட்டாவை புதின் அரசு கைது செய்திருக்கலாம் என்றும் அவர் சிறையில் இருக்கலாம் என்று மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகின.

ரஷ்யாவில் அதிபர் புதினை ‘சைக்கோ’ என்று விமர்சித்த மாடல் அழகி கொலையானது அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் பிரபல மாடல் கிரெட்டா வெட்லர். 23 வயதான அவருக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கிரெட்ட கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ‘சைக்கோ’ என்றும் ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என புதினை கிரெட்டா கடுமையாக விமர்சித்திருந்தார்.  கிரெட்டாவின் துணிச்சலான பதிவைக் கண்டு பலரும் வாயடைத்துப் போனார்கள். ஆனால், அடுத்து சில மாதங்களிலேயே சமூக வலைதளங்களில் கிரெட்டா எந்தப் பதிவையும் போடாமல், அவருடைய பக்கம் சைலண்டாக இருந்தது.  கிரெட்டாவை புதின் அரசு கைது செய்திருக்கலாம் என்றும் அவர் சிறையில் இருக்கலாம் என்று மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத சூட்கேஸில் சடலம் ஒன்று இருப்பதாக ரஷ்ய போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்தச் சடலத்தை மீட்டனர். பின்னர்தான் இறந்துகிடப்பது கிரெட்டா வெட்லர் எனத் தெரியவந்தது. தீவிர விசாரணையில் கிரெட்டா கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால், ரஷ்யாவில் பலரும் அதிபர் புதின் மீது சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில் திடீர் திருப்பமாக விசாரணையில் புதிய தகவல் கிடைத்தது. அதை வைத்து ரஷ்ய போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கிரெட்டா வெட்லரின் காதலர் டிமிட்ரி கொரோ போலீஸில் சரண் அடைந்தார்.

டிமிட்ரி கொரோவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவருக்கும் கிரெட்டாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சியாக கிரெட்டாவை டிமிட்ரி கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. அதோடு கிரெட்டாவின் உடலை சூட்கேஸில் வைத்து விட்டு அந்த சூட்கேஸோடு மூன்று நாட்கள் அலைந்ததும் தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!
பெண் பத்திரிகையாளரைப் பார்த்து கண் அடித்த பாக். ராணுவ அதிகாரி! கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்!