Ukraine - Russia Crisis: அமெரிக்கா தான் போருக்கே காரணம்..இப்ப புரியுதா..? வடகொரியா கருத்தால் அதிர்ச்சி..

By Thanalakshmi VFirst Published Feb 27, 2022, 3:13 PM IST
Highlights

Ukraine - Russia Crisis: உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முக்கிய காரணமே அமெரிக்கா தான் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
 

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இராணுவ தாக்குதல் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா,பிரிட்ட உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களை கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. மேலும் அமெரிக்கா, பிரிட்ட உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தங்கள் மீது பொருளாதார தடை விதித்து மேற்கத்திய நாடுகள் மீது  பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் விமானங்கள், ரஷ்ய விமான நிலையம் மற்றும் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.

மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரித்து , இராணுவ உதவி செய்யும் நாடுகள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.  ரஷ்ய அதிபர் புதின் தனும் உரையில் அணு ஆயுத மிரட்டலும் மறைமுகமாக விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. 15 நாடுகளை உறுப்பினர்களாக அந்த கவுன்சிலில் 11 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தன. சீனா, ஐக்கிர அரபு அமீரகம், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆனாலும் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நீக்கியது.

இந்நிலையில் இந்த போருக்கு மூல காரணமே அமெரிக்கா தான் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. மேலும் தனது அறிக்கையில், உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியாயமானதே. ரஷ்யாவின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் செவி சாய்க்கவில்லை. அமெரிக்கா நேட்டோ வாயிலாக மறைமுகமாக தனது ராணுவ பராக்கிரமத்தை நிறுவ முயன்றது. அமெரிக்காவின் இந்த ஆணவப் போக்கும், தேவையற்ற மத்தியஸ்தமும் தான் உக்ரைன் பிரச்சினைக்கு வித்திட்டது. 

அமெரிக்கா இரட்டைக் கொள்கையுடன் செயல்பட்டு உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு அமைதி, ஸ்திரத்தன்மை என்ற போர்வையில் அவற்றை தவறாக வழிநடத்துகிறது. ஆனால், இன்று தாக்குதல் என்ற நிலை வந்தவுடன் அந்த உக்ரைனுக்கு ராணுவ உதவி ஏதும் வழங்காமல் கைவிட்டுவிட்டது. உலகளவில் அமெரிக்க ஆதிக்க காலம் கடந்துவிட்டது. உக்ரைன் மீது தாக்குதல் நடைபெற அமெரிக்கா தான் காரணம். இதிலிருந்து சிறிய நாடுகள் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் பலம் இல்லாவிட்டால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் என்பதே அது. அதுதான் இந்தத் தாக்குதலின் முக்கியக் கருத்தும் கூட என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரஷ்ய தாக்குதலுக்கு சீனா, பாகிஸ்தான் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது வட கொரியாவும் இணைந்துள்ளது.வட கொரியா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

click me!