எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவின் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ரஷ்யா..!! அடுத்த ஆப்பு அமெரிக்காவுக்கு..??

By Ezhilarasan Babu  |  First Published Aug 24, 2020, 2:06 PM IST

இத்தகைய சூழ்நிலையில்  எண்ணெய் வணிகத்தில் ரஷ்யா தன்னை அதி வல்லமை பொருந்திய நாடாக  மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது. மூன்றாம் இடத்தில் இருந்து ரஷ்யா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது மட்டுமல்லாமல், அது சவூதி அரேபியாவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.


உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யா, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியாவை அது பின்னுக்கு தள்ளியுள்ளது.  இதனால் உலகின் இரண்டாவது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. உண்மையில் உலக நாடுகள் இடையே நடக்கும் மோதல்கள் அனைத்தும், எண்ணெய் உற்பத்தியை மையமாக வைத்தே நடைபெறுகிறது.  எண்ணெய் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடு உலகின் வெற்றிகரமான நாடு எனவும் கருதப்படுகிறது. அதேபோல் எண்ணெய் உற்பத்தி அதிகம் செய்யும் நாடுகள் எவையோ அவைகளே  உலக நாடுகளில் பணக்கார நாடுகளாகவும் மாற்றியுள்ளன. 

Tap to resize

Latest Videos

இத்தகைய சூழ்நிலையில்  எண்ணெய் வணிகத்தில் ரஷ்யா தன்னை அதி வல்லமை பொருந்திய நாடாக  மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது. மூன்றாம் இடத்தில் இருந்து ரஷ்யா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது மட்டுமல்லாமல், அது சவூதி அரேபியாவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. ஆனால் எப்போதும் போல அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி செய்யும்  நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசை சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது 2020 ஜூன் மாதத்தில் ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 8 மில்லியன் பீப்பாய் என்னையே உற்பத்தி செய்துள்ளதாகவும், அதே சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஒரு  நாளைக்கு 7.5 மில்லியன் பீப்பாய்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நாளொன்றுக்கு சுமார் 150 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்து நம்பர் ஒன் உற்பத்தி நாடு என்ற நிலையில் முதலிடத்தில்  உள்ளது. 

இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் சவுதி  அரேபியாவுக்கும் இடையேயான கச்சா எண்ணெய் விலை மீதான போர் தொடங்கியது. ரஷ்யா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோரி வந்தது.  சர்வதேச சந்தையில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச அளவில்  என்னை விலை வீழ்ச்சியை தடுக்க முடியும் என சவுதி அரேபியா கூறியது, மேலும் ரஷ்யாவுக்கு சில நிபந்தனைகளையும் அது விதித்தது. ஆனால் ரஷ்ய அந்த எந்த நிபந்தனைகளையும் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கு ஈடாக சவுதி அரேபியாவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் எண்ணெய் விலையையும் தள்ளுபடி செய்ய வேண்டியது சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடதக்கது. 
 

click me!