மேகன் மார்க்லே என் மருமகள் அல்ல மகள்… உருகிய இளவரசர்  சார்லஸ்…. அசர வைத்த இங்கிலாந்து அரண்மனைத் திருமணம்…..

First Published May 20, 2018, 9:31 AM IST
Highlights
prince Haari wedding in Britton


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -  டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. உலகே வியந்து பார்த்த இந்த திருமணத்தில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.. அரச குடும்பத்தின் திருமணம் என்பதால்  லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை கடவுள் ஆசீர்வதிப்பாராக. அவர்கள் இருவரும் கடவுளின் அன்பால் நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.



திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. அதனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது மேகன் மார்கலின் எனது மருமகள் அல்ல மகள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். 

இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் இங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது 

இதுதவிர, எங்கிருந்தெல்லாம்  மணவிழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர். 

இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 4 மணி  மணியளவில் அரசகுடும்பத்தார் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வர தொடங்கினார்கள். இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசரும், மணமகனுமான ஹாரி ஆகியோர் தேவாலயம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து  பிரிட்டன் அரசு இரண்டாம் எலிசபெத் இங்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து மணமகள் மேகன் மார்க்லே காரில் வந்து இறங்கினார்.  சற்று நேரத்தில் இளவரசர் சார்லஸ் மணமகளின் கையை பற்றியபடி தேவாலயத்திற்குள் அழைத்து சென்றார். 

பின்னர் இசைக்குழுவினரின் பிரார்த்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர். 

திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 19-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சாரட் வண்டியை விண்ட்சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து சென்றன.



சாலைகளின் ஓரம் பிரிட்டன் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். 

click me!