
மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் நேற்றிரவு அமெரி்க்க இசை கலைஞரின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாப் இசைப் பாடல்களுடன் இசைக் கச்சேரி நிறைவடைந்த பின் அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் நிகழ்விடத்திலேயே 19 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
மனித நேயமற்ற இந்த கொடூரத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மான்செஸ்டரில் நடைபெற்றது தற்கொலைப் படைத்தாக்குதல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
22 மரணத்திற்கு காரணமான இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்காத நிலையில், கொண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 23 வயதான இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.