வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு! - மழையிலும் ஓங்கி ஒலித்த நம் தேசிய கீதம்!

By Dinesh TG  |  First Published Jun 22, 2023, 9:46 AM IST

பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தார். கொட்டும் மழையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவேற்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
 


பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நியூயார்கில் தொடங்கியது. நியூயார்க்கில் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல.. அது ஒரு வாழ்க்கைமுறை’ என்றார். பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.


இதையடுத்து, பிரதமர் மோடி தனது நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தபோது, அங்கு மழை பெய்தது, கொட்டும் மழையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் பிரதமர் வரவேற்க இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

 


இதையடுத்து, பிரதமர் மோடி தான் தங்கவுள்ள ஹோட்டலுக்கு சென்றார். அவரை காண வழிநெடுகிலும் காத்திருந்த இந்திய வம்சாவளியினர் மோடி... மோடி... என கோஷம் எழுப்பினர். அவர் தங்கவுள்ள ஹோட்டல் அருகேவும் திரண்டிருந்து மோடி கோஷம் எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
 

 

click me!