தடுப்பூசி போடலேனா அரெஸ்ட் பண்ணுவேன்... மக்களை எச்சரிக்கும் அதிபர்!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 6:43 PM IST
Highlights

தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஜெயிலுக்குள் தூக்கி போட்டுவிடுவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே மிரட்டல் விடுத்துள்ளார். 

தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஜெயிலுக்குள் தூக்கி போட்டுவிடுவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே மிரட்டல் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களாக தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்குள் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ்  மிக வேகமாக பரவக்கூடியது என்று கூற்றப்பட்டது. முன்னதாக டெல்டா வைரஸ் அதிக பாதிப்புகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தி சென்றது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது விரைவாக பரவ கூடிய தன்மையை கொண்டிருந்தது.

ஆனால், தற்போது உருவாகி உள்ள இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை காட்டிலும் பெரிய அளவில் பரவி வருகிறது. மிக குறைந்த நாட்களிலேயே உலக அளவில் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை சாதாரணமாக எடுத்துகொள்ள கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தாங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை 2 ஆண்டுகளாக கொரோனா அலறவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது உருமாறியுள்ள ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ், வல்லரசு நாடு, ஏழை நாடு, நடுத்தர நாடு என்று பாகுபாடு காட்டுவதில்லை.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவியது. ஆனால் தற்போது ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள மக்களை அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு டோஸ் கூட போடாமல் பலர் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அல்லது நான் ஜெயிலுக்குள் தூக்கி போட்டுவிடுவேன் என மிரட்டல் விடுத்திருக்கிறார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.3 கோடி மக்களை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மீறி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரித்துள்ளார்.

click me!