இந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..!

By Thiraviaraj RM  |  First Published Oct 30, 2020, 5:01 PM IST

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இருவழி வர்த்தகம் நடைபெற, தனது நிலப்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.


இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் இதனால் வெங்காய ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது

.

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானுடனான ஆப்கன் ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை அட்டாரி வாகா எல்லை வழியாக அனுமதித்து வருகிறது பாகி​​ஸ்தான். ஆனால், அப்படி இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் 30 சதவீத வெங்காயத்தை மட்டுமே இந்தியா கொண்டு செல்ல முடிவதாகவும், 70 சதவீதம் கால தாமதத்தால் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இருவழி வர்த்தகம் நடைபெற, தனது நிலப்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஆப்கானிஸ்தான் கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அட்டாரி வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை கொண்டு வர பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால் நேபாளத்தில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இந்திய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால் அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

click me!