பல உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்துகள் உட்பட மிகவும் விரிவான சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நிலநடுக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் என அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புத்தாண்டு தினத்தன்று மத்திய ஜப்பானைத் தாக்கிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏராளமான உயிரிழப்புகளுடன் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். "பல உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்துகள் உட்பட மிகவும் விரிவான சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..