ஒருத்தனும் நாய் வளர்க்கக்கூடாது... வளர்ப்பு நாய்களை இறைச்சி கடைக்கு அனுப்ப அதிரடி உத்தரவு..!

Published : Aug 19, 2020, 02:40 PM IST
ஒருத்தனும் நாய் வளர்க்கக்கூடாது... வளர்ப்பு நாய்களை இறைச்சி கடைக்கு அனுப்ப அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தென்கொரிய ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. 

வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க வேண்டுமென அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

 '25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வடகொரியாவில் 60 சதவிகித மக்கள் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்' எனக் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை மீறி அணு ஏவுகணை சோதனை செய்வதால் வடகொரிய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை, சமீபத்திய வெள்ளம், கொரோனா அச்சுறுத்தல் ஆகியன இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

உணவு பற்றாக்குறை பிரச்னை காரணமாக அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறார். வடகொரியாவில் நிலவும் உணவுப்பற்றாக்குறை குறித்து அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து, அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து வருகின்றனர். அவற்றை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருகின்றனர். அவற்றில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தென்கொரிய ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!