இறந்துபோன பிஎம்டபிள்யூ  கார்  பிரியர்….. அவரை எப்படி அடக்கம் செய்தார்கள் தெரியுமா ? பாருங்க அசந்துருவீங்க….

Asianet News Tamil  
Published : Jun 13, 2018, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இறந்துபோன பிஎம்டபிள்யூ  கார்  பிரியர்….. அவரை எப்படி அடக்கம் செய்தார்கள் தெரியுமா ? பாருங்க அசந்துருவீங்க….

சுருக்கம்

Nigirien man buries his father with bmw car

நைஜிரியாவில் பிஎம்டபிள்யூ  கார் மீது அதிக பிரியம் வைத்திருந்த தன் தந்தை இறந்தபோது, புதிய பிஎம்டபிள்யூ  கார் ஒன்றை வாங்கி அதில் அவரது உடலை வைத்து மகன் அடக்கம் செய்துள்ளார்.

நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி  பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி.  இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவருடைய தந்தைக்கு  பிஎம்டபிள்யூ கார் என்றால் கொள்ளை பிரியம். தனது வீட்டில் 3 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில்  அசுபுயுகியின் தந்தை திடீரென மரணமடைந்தார். இதையடுத்து  அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி அவரின் உடலை, பூமிக்குள் அசுபுயுகி  அடக்கம் செய்தார். இந்த சம்பவம்   அந்தப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசுபுயுகியின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ  காரின் மதிப்பு கிட்டதட்ட 66 லட்சம் ரூபாய்.

தனது உடலை புதிய பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான  தனது ஆசை என அசுபுயுகியின் தந்தை தன்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார் என்றும்  தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் அசுபுயுகி கூறியுள்ளார்.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ  கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

வேலை இல்லனு கவலையே வேண்டாம்! ஓமன் சுல்தான் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு!
இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!