பாகிஸ்தானிடமிருந்து 10 பயிற்சி விமானங்கள் வாங்கும் நைஜீரியா

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 05:56 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பாகிஸ்தானிடமிருந்து 10 பயிற்சி விமானங்கள் வாங்கும் நைஜீரியா

சுருக்கம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு 10 பயிற்சி விமானங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த விமானங்கள் அனைத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘சூப்பர் முஷ்ஷாக்’ ரக விமானங்களாகும்.

இது குறித்து பாகிஸ்தான் விமானப்படையின் செய்தித்தொடர்பாளர் சயத் முகமது அலி கூறுகையில், “ 10 பயிற்சி விமானங்களை நைஜீரியாவுக்கு விற்பனை தொடர்பாக அந்நாட்டு ஏர் மார்ஷல் இயா அகமது அப்துல்லாகி மற்றும் பாகிஸ்தான் ஏரோ நாட்டிகல் ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் ஆகியோருக்கு இடையே ேநற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அந்நாட்டு விமானிகளுக்கு பயிற்சியும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்பட உள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் வெளிநாடுகளுக்கு பாகிஸ்தான் விமானங்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது மட்டுமல்லாமல், வருவாயை பெருக்கவும் வழியாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் விமான தயாரிப்பு பிரிவை வலுவாக்கும்'' எனத் தெரிவித்தார்.

சூப்பர் முஷ்ஷாக் விமானம் என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்பத்தின் உதவியால் பாகிஸ்தான் உருவாக்கியது. இந்த விமானங்கள் சவூதிஅரேபியா, ஓமந், ஈரான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பாகிஸ்தான் விற்பனை செய்துள்ளது.

விரைவில் புதிய ராணுவதளபதி

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ராகீல் ஷெரீப் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற உள்ளார். அடுத்து யார் நியமிக்கப்படுவார் என அந்நாட்டு நிர்வாகத்துறை அமைச்சர் தாரிக் பசல் சவுத்ரி கூறுகையில், “ ராணுவத் தளபதி ராகீல் ஷெரீப் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். அடுத்த தளபதி யார் என்பதை இன்னும் அரசு முடிவு செய்யவில்லை. அடுத்த வாரம், அல்லது 10 நாட்களுக்குள் புதிய ராணுவத் தளபதி பெயரை அரசு அறிவிக்கும்'' என்று தெரிவித்தார்.

பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை என தற்போதுள்ள ராகீல் ஷெரீப் முன்பே கூறியுள்ளதால், இவருக்கு அடுத்துள்ள ஜெனரல் பர்வேஸ் கயானி தளபதியாக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!