
தற்போதைய சூழலில் 130 பெண்களை திருமணம் செய்து பிரபலமாக பேசிப்பட்ட முஸ்லீம் மத போதகர், திடீரென காலமானார். அவருக்கு வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜெர் மாகாணம் பிடா பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் (93). இவருக்கு 130 மனைவிகளும், 203 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அபுபக்கர், தனது உறவினர்களிடம், “நான் மரணத்தை தழுவ காத்திருக்கிறேன். எனது ஆயுட் காலம் முடிந்துவிட்டது. இறைவன் விரைவில் என்னை அழைத்து செல்வார்” என கூறி வந்துள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதால், அவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு, 86 மனைவிகளோடு வசித்து வந்த அபுபக்கரை, உடனடியாக 48 மணி நேரத்துக்குள் 82 மனைவிகளையும் விவகாரத்து செய்ய வேண்டும் என முஸ்லிம் மத போதகர்கள் வலியுறுத்தினர். இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அபுபக்கர், தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளவே என்னை கடவுள் அனுப்பினார் என வாதிட்டார். மேலும், 86 மனைவிகளுடன் வாழ்ந்த அபுபக்கர், கூடுதலாக 44 பெண்களை திருமணம் செய்து, இறுதியில் 130 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவால், திடீரென காலமானார்.
இதைதொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடந்த்து. அப்போது, இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் பீடா பகுதியில் திரண்டனர். அனைவரும் மனைவி வழி உறவினர்கள் என்பதும், இதுபோன்று இறுதி சடங்கு நிகழ்ச்சியலில் யாரும் கலந்து கொண்டதில்லை என்றும் பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.