பெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய கொடூரத்  தாய்… உயிருக்கு போராடும் சிறுமி…

 
Published : May 19, 2018, 07:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய கொடூரத்  தாய்… உயிருக்கு போராடும் சிறுமி…

சுருக்கம்

Mother attack her daughter 60 times in america

அமெரிக்காவில்  குழந்தைகள்மேல் எப்போதும் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்த தாயை தட்டிக் கேட்ட சிறுமியை பெற்ற  மகள் என்றும் பாராமல்  60 முறை கொடூரமாக கத்தியால் குத்தியதால், அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

அமெரிக்காவின்  ஒக்லாஹோமாவின்  டல்ஸா  பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் தாஹிரா அகமது .  இவருக்கு மூன்று  குழந்தைகள் உள்ளனர்.  இந்த மூன்று குழந்தைகளும்  எப்போதும் சேட்டை பண்ணிக் கொண்டே இருந்ததால் , கடும் கோபத்தில் இருந்த  தாஹீரா  தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று  சமாளித்து வந்துள்ளார்.

தனது தாயின் தொடர் அடக்குமுறையால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், கேள்வி கேட்ட  அந்த சிறுமியை  கத்தியால்  50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

அதன் பின் கோடாரியில் முட்ட வைத்து, வீட்டின் சமையலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒளிந்து கொண்டார்.இது குறித்த தகவல்  அறிந்த போலீசார் அந்த தாயை கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது,  குழந்தைகளாள் கடும் அதிருப்தியில் இருந்த இவர், குழந்தைகளின் வாயில் டேப்பை வைத்து ஓட்டிவிடுவது, கையை கட்டிவிடுவது என்று செய்துள்ளார்.

இதை 11 வயது சிறுமி எதிர்த்து கேட்டதால், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட மற்றொரு 9 வயது மகள் அங்கிருந்து தப்பி தங்களுடைய உறவினரின் வீட்டில் சென்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் வந்து பார்த்த பின்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நாங்கள் அவரை தேடிய போது கிடைக்கவில்லை, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்னர் வீட்டின் பின்புறம் ஒளிந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்த பின்பே அவரை கைது செய்தோம்.

அவருடன் இருந்த 8 வயது சிறுமையை மீட்டுள்ளோம். விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!