பிரபஞ்ச அழகிப்போட்டி… மகுடம் சூடினார் பிரான்ஸின் ஐரிஷ் மிட்டனேரே…

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 08:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பிரபஞ்ச அழகிப்போட்டி… மகுடம் சூடினார் பிரான்ஸின் ஐரிஷ் மிட்டனேரே…

சுருக்கம்

பிரபஞ்ச அழகிப்போட்டி… மகுடம் சூடினார் பிரான்ஸின் ஐரிஷ் மிட்டனேரே…

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனேரே மகுடம் சூடினார். 

2017-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு, இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனரே, 2017 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பு வெளியானபோது அவர் உணர்ச்சிவசப்பட்டவராய் மகிழ்ச்சியில் திளைத்தார்.

இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ரகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர். 

பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட ஐரிஸ் மிட்டனரே, பெர்சியா வம்சாவளியைச் சேர்ந்தவர்.

தற்போது பல் அறுவை சிகிச்சை குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம், பற்கள் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 



 

PREV
click me!

Recommended Stories

அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!
தண்ணீர் இல்ல அது விஷம்.. இந்தூர் விவகாரத்தில் பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி