திருமணமான அடுத்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி உயிரிழந்த பரிதாபம்..!

Published : Aug 25, 2019, 05:16 PM IST
திருமணமான அடுத்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

புதுமண தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் வெளியே நின்ற காரில் ஏறி புறப்பட தயாராக இருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் பலமுறை உருண்டது. இந்த விபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோர் கண்முன்ணே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன்(19). இவரது தோழி பவுட்ரியாகஸ்(20). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர், புதுமண தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் வெளியே நின்ற காரில் ஏறி புறப்பட தயாராக இருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் பலமுறை உருண்டது. இந்த விபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோர் கண்முன்ணே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நிமிடங்களில் புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!