உள்ளாடையான ஜட்டித் துணியில் மாஸ்க் தயாரித்து ஏமாற்றம்... பாகிஸ்தானியர்கள் முகத்தில் மாட்டி விட்ட சீனா..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2020, 7:44 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய மாஸ்குகள் உள்ளாடையான ஜட்டி  தயாரிக்கும் துண்டியில் இருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய மாஸ்குகள் உள்ளாடையான ஜட்டி  தயாரிக்கும் துண்டியில் இருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க பாகிஸ்தான், சீனாவிடம் கெஞ்சியது. சீனாவும், பாகிஸ்தானுக்கு மாஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியது. அதில், பாதி மாஸ்க்குகளை உதவியாகவும், பாதி மாஸ்க்குகளை பணத்திற்காக கடன் கொடுத்தும் சீனாவிடம் பாகிஸ்தான் பெற்றது. ஆனால், மாஸ்க்குகள் உள்ளாடையான ஜட்டிகள் தயாரிக்கப்பயன்படும் துணிகளில் இருந்து தயாரித்து சீனா அனுப்பி விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சீனா நம்மை ஏமாற்றி விட்டது. இந்த மாஸ்க்குகள் நல்ல துணியிலிருந்து தயாரிக்கப்படவில்லை. உள்ளாடை தயாரிக்கும் துணியிலிருந்து தயாரிக்கப்பட்டது என குற்றம் சாட்டி வருகிறார்கள் பாகிஸ்தான் மக்கள். இதே சீனா பாகிஸ்தானுக்கு கப்பல் படைக்கு தேவையான கப்பல்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.

சீனாதான் பாகிஸ்தானை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வைத்து இருக்கிறது. ஆகையால் சீனா என்ன செய்தாலும் பாகிஸ்தானால் கேள்வி கேட்க முடியாது.  இந்த நிலையில் பாகிஸ்தான், பாகிஸ்தானுக்கு சொந்தமா? அல்லது பாகிஸ்தான், சீனாவுக்கு சொந்தமா என்கிற சந்தேகமே உருவாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் பொருளாதாரம் பரிதாப நிலைக்கு சென்றுவிடும். பாகிஸ்தானை மொத்தமாக சீனா கையகப்படுத்தி விடும். இது இந்தியாவிற்கு தலைவலியாக இருக்கும். அந்தத் திட்டங்களை தான் சீனா இப்போது பெரிய அளவில் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

click me!