நமது ராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில் கூடிய குண்டுதுளைக்காத மிகவும் கடினமான எஃகு பிளேட்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட்டுகள் எவ்வளவு வலிமையான தோட்டக்கலால் தாக்கினாலும் அதை தாங்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ வீரர்களுக்காக உள்நாட்டில் பிரத்யேகமான தயாரிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகள் விரைவில் வழங்கப்படவுள்ளது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.
undefined
இந்திய எல்லையில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள், மீது எதிரிநாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளால் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் நம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு இந்திய பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகள்வழங்கப்படஉள்ளது.
முதற்கட்டமாக எல்லை பாதுகாப்பு படையில் உள்ள வீரர்களுக்கு ஒரு லட்சத்து 86 ஜாக்கெட்டுகள் கொள்முதல் ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளது அதன்படி உருவாக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகளை கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.