கைலாசா நாட்டில் 10 கோடி மக்கள் வசிக்கிறார்களா..? புரூடா விடும் நித்தியின் நாட்டுக்கு உதவுவது யார்..?

By Thiraviaraj RMFirst Published Dec 3, 2019, 6:04 PM IST
Highlights

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் இருப்பதாகவும், 20 லட்சம் சீடர்கள் இருப்பதாகவும் நித்யானந்தா அவரது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

தனிநாடு இணைய தளத்தில்  இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பதவியை நித்யானந்தா வகிப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும்  நடத்தி வருகிறார்.

கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு. கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர். நித்யானந்தா கைலாசத்திற்கு  தனி நாடு அந்தஸ்து வழங்க ஐநாவை நாட உள்ளார். 

பாஸ்போர்ட் தங்கம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்தத் தீவில் 10 கோடி மக்கள் வசிப்பதாக கூறுவதைத் தான் நம்ப முடியவில்லை. ஒரு சிறிய தீவில் 10 கோடி பேர் வசிக்க முடியுமா?  திடீரென உருவாக்கப்பட்டுள்ள நாட்டில் 10 கோடி பேரை வைத்து சமாளிக்க முடியுமா?

 

10 கோடி பேர் வசிக்கும் அளவுக்கு கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளாதா? இப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றும் பணியில் நித்தி இறங்கி உள்ளாரா என பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. 

click me!