கொரோனாவின் ஆக்டோபஸ் பிடியில் வசமாக சிக்கிய ஜப்பான்..!! தாக்குபிடிக்க முடியவில்லை என கதறல்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 11, 2020, 10:05 AM IST

இதுவரையில் ஜப்பானில் வைரசுக்கு 100 பேர் உயிரிழந்தனர் , இது குறித்து தெரிவிக்கும் ஜப்பான் நாட்டு மக்கள்,   ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று  அதிகமாக உள்ளது ,  ஆனாலும் அரசு ஒலிம்பிக் போட்டியை கருத்தில்கொண்டு அந்த எண்ணிக்கையை மறைக்கிறது என குற்றஞ்சாட்டுகின்றனர். 


கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த  முடியாமல் ஜப்பான் பீதியடைந்துள்ளது.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை மாற்றியமைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக  ஜப்பான் தெரிவித்துள்ளது ,  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  அமெரிக்கா , இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஸ்பெயின் , போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என வழிதெரியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன .  இந்நிலையில் கொரோனாவில் ஆக்டோபஸ் கரத்திலுருந்து  சற்று விலகியே இருந்த ஜப்பான் , மெல்ல மெல்ல  பிடிக்குள் வந்திருக்கிறது .  உலக நாடுகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் மட்டும் அந்த வைரசால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்தது . 

Latest Videos

இந்நிலையில்  நிதானமாக ஜப்பானுக்குள் ஊடுருவியுள்ள இந்த  வைரஸ் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.  இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஜப்பானில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள 6  மாகாணங்களை கண்டறிந்த ஜப்பானி அரசு அங்கு  அவசரநிலை  பிரகடனம் செய்துள்ளது.  இது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ,  நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவசர நிலை பிரகடனம்  செய்யப்படுவதாக அறிவித்தார்.   குறிப்பாக டோக்கியோ ,  ஒசாகா ,  போன்ற நகரங்களில்  இது உடனடியாக அமலுக்கு வர வேண்டுமென தெரிவித்திருந்தார் .  ஜப்பானில் செய்யப்பட்டுள்ளது அவசர நிலை பிரகடனம்,  ஐரோப்பாவில் பின்பற்றப்படும் ஊரடங்கு பாணியில் இருக்காது என்ற பிரதமர் அபே,  மக்களுக்கு தடையின்றி  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் நடைபெறும் என அறிவித்தார். 

ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த அவசர நிலை இருக்கும் என தெரிவித்த அவர் ,  வணிகர்கள் ,  தொழிலாளர்கள் ,  பொதுமக்கள் என அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் ,  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஜப்பான் அதிகாரிகள் ,  அண்மையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பியவருகள் மூலம் வைரஸ் தொற்று அதிகரித்திருக்கிறது என கூறியுள்ளனர் ,  இது பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கும் அவர்கள்,  நோய் யார் யாருக்கு நோய் தொற்று இருக்கிறது என்பதை தங்களால்  துள்ளியமாக கண்டுபிடிக்க முடியவில்லை  எனவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் .  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ,  ஜப்பானில் வைரஸ் தீவிரமடைந்தால்  போட்டிகளை நடத்த முடியாது என்பதால் ஜப்பான் அரசு மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாகியுள்ளது. 

இதுவரை ஜப்பானில் 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   என்றும் புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது  உறுதியாகி இருக்கிறது என்றும்  தெரிவித்துள்ளனர்.  அதேபோல் டைமண்ட் இலவரசி வெளிநாட்டு பயணத்தில் தொடர்புடைய 712 பேர் கொரோனாவுக்கு ஆளாகி இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.  இதுவரையில் ஜப்பானில் வைரசுக்கு 100 பேர் உயிரிழந்தனர் , இது குறித்து தெரிவிக்கும் ஜப்பான் நாட்டு மக்கள்,   ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று  அதிகமாக உள்ளது ,  ஆனாலும் அரசு ஒலிம்பிக் போட்டியை கருத்தில்கொண்டு அந்த எண்ணிக்கையை மறைக்கிறது என  குற்றஞ்சாட்டுகின்றனர்.  ஜப்பானில் வைரசால் பாதிக்கப்படும் 7 பகுதிகளுடன்  டோக்கியோவின் அண்டை நாடுகளான  சிபா, கனகாவா  மற்றும் சைட்டாமா, ஒசாகாவின் மேற்கு மையமாகவும், அண்டை நாடாகவும் உள்ள ஹியோகோவிலும், தென்மேற்குப் பகுதியான ஃபுகுயோகாவிலும். இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!