நீங்கள் வேற லெவல் ப்பா... கண்ணீரைத் துடைக்க "அழகான ஆண்கள்" வாடகைக்கு! எங்கு தெரியுமா?

By Kalai SelviFirst Published Dec 4, 2023, 12:35 PM IST
Highlights

ஜப்பானில் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக அவர்களுடன் அழ அழகான ஆண்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

கோபம், வேதனை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஜப்பானியர்கள் மற்ற நாடுகளை விட பின் தங்கி உள்ளனர். காரணம் அதிக வேலை அழுத்தம் தான். அங்குள்ள தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதிக வேலை அழுத்தம் இருப்பதால், தனிப்பட்ட வாழ்க்கை என்று இவர்களுக்கு எதுவும் இல்லை. இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. 

இதற்காக அங்கு உருவாக்கப்பட்டது தான் "Handsome Weeping Boys". ஊழியர்களின் கண்ணீரை துடைப்பதும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதுதான் இவர்களில் வேலை. தேவைப்பட்டால் அவர்களுடன் உட்கார்ந்து அழ வேண்டும். இதனால்   பணியாளர்களின் மனதில் சுமை குறைந்து சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். 

Latest Videos

 "Handsome Weeping Boys" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோழர்களை வழங்கும் இகெமேசோ டான்ஷி 7,900 யென்களுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூபாய்
4500-க்கு வேலைக்கு அமர்த்தலாம்.

ஹிரோகி டெராய்:
ஹிரோகி டெராய் என்பவர் தான் "Ikemeso Danshi'யை தொடங்கினார். மன அழுத்தத்தில் இருப்பவர்களுடன், 
அவர்களுடன் சேர்ந்து அழுவதற்காகவே இந்த சேவை தொடங்கப்பட்டது. அழுவது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது சிகிச்சை போல் செயல்படுகிறது. அழுகை நல்ல சமூக உறவுகளுக்கும் பங்களிக்கிறது. இந்த பின்னணியில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டது.

அழுவது ஆரோக்கியத்திற்கு நல்லது:
பணியாளர்கள் தங்கள் அழுகையை கூட்டாக வெளிப்படுத்துவதன் மூலம் பயமின்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பயிற்சியளிக்கப்படுகிறார்கள். உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுகிறது. ஹிரோகி டெராயின் கூற்றுப்படி, அழுவது மனதை இலகுவாக்கும். பணியிடத்தில் தயக்கமின்றி அழுவது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஊழியர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. டெராய் நிறுவனம் இந்த சேவையை தொடங்கியதிலிருந்து இதை அனுபவித்து வருகிறது. தற்போது,   இந்த சேவை ஜப்பானிய குடிமக்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்றுள்ளது. சிலர் பாராட்டினாலும், சிலர் இந்த செயலின் தார்மீகத்தை கேள்வி எழுப்பினர். ஒட்டுமொத்தமாக, இந்த சேவையானது மன அழுத்தம் நிறைந்த, போட்டி நிறைந்த உலகில் ஆதரவின் தேவையை நிவர்த்தி செய்கிறது.

click me!