101 வயதில் காலமான முன்னாள் பிரதமர்..!

By Manikandan S R SFirst Published Nov 29, 2019, 4:54 PM IST
Highlights

உலகின் மூத்த அரசியல்வாதியான யஷுஹிரோ நகசோனே 101 வயதில் காலமானார்.

கடந்த 1982 முதல் 1987 வரை ஜப்பானின் பிரதமராக இருந்தவர் யஷுஹிரோ நகசோனே. 1918 ல் பிறந்த இவரது தற்போதைய வயது 101 ஆகும். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி கடந்த சில வருடங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டோக்கியோவில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். 1947 ம் ஆண்டு முதன்முதலாக ஜப்பான் பாராளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட இவர், தொடர்ந்து 20 முறை தேர்தலை போட்டியிட்டு வென்றுள்ளார்.

தனது பதவி காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இருவரது நட்பும் 'ரான்-யசு' நட்பு என்று அப்போது பிரபலமாக பேசப்பட்டிருந்தது. இதனிடையே உலகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவராக திகழ்ந்து வந்த யஷுஹிரோ நகசோனே தனது 101 வயதில் காலமாகியுள்ளார். அவருக்கு ஜப்பான் அரசாங்கம் சார்பாக அரசமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

click me!