சீனாக்காரனுக்கு உயிர் பயத்தை காட்ட வரும் ஜப்பான்..!! தைவானுக்கு ஆதரவாக களமிறங்கியது..!!

By Ezhilarasan BabuFirst Published May 22, 2020, 6:30 PM IST
Highlights

சுதந்திர சமுதாயங்களில் வாழும் மக்கள் மீது சீனாவின் கடுமையான அச்சுறுத்தல்களை ஜப்பான் அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என சுசுகி  சீனாவை எச்சரித்துள்ளார் .  சீனாவின் அடக்குமுறைகளை எதிர்க்க ஜப்பான் எல்லாவகையிலும் தயாராக இருக்கிறது என தெரிவித்த அவர்

ஜப்பான் தைவானுடன் ஒரு அர்த்தமுள்ள உறவை பேணிவருகிறது,  ஆனால் சீனா தைவானை அழிக்கப் பார்க்கிறது என ஜப்பானின் வெளியுறவு துறை அமைச்சர் கெய்சுக் சுசுகி குற்றஞ்சாட்டியுள்ளார். தைவானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள  நிலையில் அவரையும் , துணை ஜனாதிபதி வில்லியம் லாயையும் வாழ்த்திய ஜப்பான் வெளியுறவு துறை அமைச்சர்  சுசுகி இவ்வாறு சீனா மீது குற்றம் சாட்டியுள்ளார்.  சீனா பல ஆண்டுகளாக தைவானை தனது காலனி நாடாக பாவித்து வருகிறது , ஆனால் கடந்த 1949-இல் நடந்த யுத்தத்தில் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது .  அதன் பின்னர் தைவான் தன்னை ஒரு சுயாட்சி பிரதேசமாக அறிவித்து வந்தாலும் , பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. அதே நேரத்தில் சீனாவும் தைவான் மீது  பழையபடி உரிமை கொண்டாடி வருகிறது . சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றிவரும் நிலையில் சீனாவுக்கு எதிராக தைவானின் சுதந்திரப் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரிக்க தொடங்கியுள்ளது . 

 

தைவானில் சுயாட்சி மற்றும் ஜனநாயகம் மலர அமெரிக்கா விரும்புகிறது என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளதுடன் தைவான் மற்றும் தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து வருகிறது. இந்நிலையில் தைவானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ள நிலையில்  அமெரிக்கா அவருக்கு வாழ்த்துக் கூறியதை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா,  தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வரும் நிலையில் மூன்றாவது நாடு  இதில் தலையிடும் பட்சத்தில்  சீனா தன் ராணுவ வலிமையை பயன்படுத்த தயங்காது என எச்சரித்துள்ளது. இந்நிலையில் தைவான்  சீனாவுடன் இணைய வேண்டும் என சீனா பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வருகிறது .  இல்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வருகிறது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்,  சீனாவின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உலக சுகாதார  அமைப்பில் தைவான் இடம்பெறுவது தடுக்கப்பட்டுவருகிறது. 

WHO மற்றும் சர்வதேச சிவில் விமான அமைப்பு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளில் இருந்து தைவான்  விலகியுள்ளதற்கு சீனாதான் காரணம் என சுசுகி குறிப்பிட்டுள்ளார், தைவானை சீனா தொடர்ந்து கொடுமைப்படுத்துவதும்,  ஜப்பானிய கடற்பகுதியில் அடிக்கடி ஊடுருவுவது போன்ற நடவடிக்கைகள் கொரோனா நோய்த் தோற்று சமயத்தில் உலக சமுதாயத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.  உலக சுகாதார அமைப்பில் தைவான் இடம்பெற வேண்டுமென ஜப்பான் விரும்புகிறது ஆனால் அதை சீனா தொடர்ந்து தடுக்கிறது என குற்றம்சாட்டிய அவர்  கொரோனா வைரஸ் தடுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள தைவானின் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய WHO அதற்கு பதிலாக சீனாவின் அரசியல் நலன்களுக்காக தைவானை ஒதுக்குகிறது என அவர் குற்றம் சாட்டினார் .   சுதந்திர சமுதாயங்களில் வாழும் மக்கள் மீது சீனாவின் கடுமையான அச்சுறுத்தல்களை ஜப்பான் அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது  என சுசுகி  சீனாவை எச்சரித்துள்ளார் .  சீனாவின் அடக்குமுறைகளை எதிர்க்க ஜப்பான் எல்லாவகையிலும் தயாராக இருக்கிறது என தெரிவித்த அவர் தைவானின் பாதுகாப்பு அண்டை நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய ஒன்று என கூறியுள்ளார் . 

 

click me!