ஜப்பானில் அவசர பிரகடனம்..!! காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால் முடங்குகிறது 6 மாகாணங்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 7, 2020, 3:22 PM IST

ஜப்பானில் கொரோனா வைரசின் தாக்கத் அதிகரித்து வரும் நிலையில்  அடுத்த ஒரு மாத காலத்திற்கு  ஆறு மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனம் செயவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.


ஜப்பானில் கொரோனா வைரசின் தாக்கத் அதிகரித்து வரும் நிலையில்  அடுத்த ஒரு மாத காலத்திற்கு  ஆறு மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனம் செயவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தவிர்க்க முடியாத காரணத்திற்காக இந்த அவசர நிலையை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது உலகளவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 70 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில்  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  

Latest Videos

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது , இந்நிலையில் மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஜப்பானில் வைரஸ் தொற்று இருந்து வந்தது ,  இந்நிலையில்  திடீரென அந்த வைரஸ்  அங்கு வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இதனால் இதை புரிந்து கொண்ட ஜப்பான் அரசு ஆறு மாகாணங்களில் அவசர பிரகடனம் செய்துள்ளது .  குறிப்பாக டோக்கியோ மற்றும் ஒசாக்கா போன்ற நகரங்களில் அவசரப் பிரகணனம் இன்று நள்ளிரவு முதல்  நடைமுறைக்கு வருகிறது.  அதிகம் பாதிக்கப்பட்ட 7 பிராந்தியங்களில் ஆளுநர்கள் மக்கள் வீடுகளில் அடங்கியிருப்பதை உறுதி செய்ய  வேண்டும் எனவும் ,  வணிகர்கள் முழு அடைப்பு  செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பின்பற்றுகின்ற பாணியிலான  ஊரடங்காக இது  இருக்காது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஊரடங்கு பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார் . 

இந்த நடைமுறை அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் பொதுமக்களும்  ஊரடங்குக்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .   இதுவரை 4,000 க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு 80 பேர் உயிரிழந்துள்ளதால்  ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . குறிப்பாக  பாதிக்கப்படும் 7 பகுதிகளுடன்  டோக்கியோவின் அண்டைபகுதிகளான  சிபா, கனகாவா மற்றும் சைட்டாமா, ஒசாகாவின் மேற்கு மையமாகவும், அண்டை நாடான ஹியோகோவிலும், தென்மேற்குப் பகுதியான ஃபுகுயோகாவிலும். இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

click me!