சிகாகோவில் ஒலிக்கும் ஜல்லிக்கட்டு கோஷம்!!! - நல்ல செய்தி வந்தால்தான் நிம்மதி என தமிழர்கள் உருக்கம்

First Published Jan 19, 2017, 3:19 PM IST
Highlights

அலங்காநல்லூர், சென்னை, மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீயாய் எரிந்து பரவுகிறது ஜல்லிக்கட்டு கோஷம்.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது ஜல்லிக்கட்டு போராட்டம்.

இதே போல் இந்தியாவை கடந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, சுவிச்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள் என உலகின் அனைத்து பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஜல்லிகட்டுகாக ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு தமிழக டிவி சேனல்களின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டு கோஷங்களை எழுப்பி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் போட்டி ஆர்வலரான சதீஷ் ஞானசம்பந்தம் கூறுகையில்....

தன்னை போன்று ஏராளமானோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் படித்து பட்டம் பெற்று தற்போது பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருப்பதாக தெரவித்தார்.

தற்போது பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருந்தாலும் காளைகள் மற்றும் அது தொடர்பான ஜல்லிக்கட்டு, எருது விடும் திருவிழா போன்றவை தங்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்றும் தெரிவிக்கிறார்.

சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து கொண்டு விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும்  நமது மொழி இனம் கலாச்சாரத்திற்காக அமெரிக்க தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும்... விரைவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்ற  நல்ல செய்தி வந்தால்தான் தங்களுக்கு உண்மையான நிம்மதி என்றும் தெரிவித்தார்.

பல்லாயிரம் கி.மீ தொலைவில்  நாடு கடந்து தமிழன் எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரத்துகாக இன்றும்.. என்றும்.. எப்போதும் ..எங்கேயும்   குரல் கொடுப்பான் என்பதற்கு மண் மனம் மாறாமல் இருக்கும் இந்த சிகாகோ தமிழர்களே சான்றாவார்கள்.

 

click me!