இறப்பதற்கு முன் இத்தாலி மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சியான தகவல்..!! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2020, 12:02 PM IST
Highlights

அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது  முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர். 

தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதால் தனது டாக்டர் காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக நர்சு காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார் ,  உலகிலேயே கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பைச் சந்தித்து வரும்,  இத்தாலி நாட்டில்தான்  இந்த கோர சம்பவம் நடந்துள்ளது .  கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது ,  எதிர்முனையில் பேசிய  நபர், தன் பெயர்  அந்தோனியா டி பேஸ் எனவும், தான் தனியார்  மருத்துவமனையில் நர்சாக உள்ளதாகவும் ,  தான்  காதலித்து வந்த  மருத்துவப் பெண்ணை கொலை செய்து விட்டதாகவும் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.  அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் வந்தது , அங்கு  27 வயதான பெண் (மருத்துவர்) குவாரண்டினா, என்ற பெண் சடலமாக கிடந்தார். 

 உடனே அவரது சடலத்தைக்  கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அந்தோனியாவையும் கைது செய்து விசாரனைக்காக அழைத்துச் சென்றனர்.  அந்தோனியாவிடம் நடத்தப்பட்ட விசாரனையில்,  தானும் குவாரண்டினாவும் இத்தாலியில் சுமார் 13 ஆயிரம் பேரை பறிகொடுத்துள்ள சிசிலி மருத்துவமனையில்  பணியாற்றி வந்ததாக கூறினார்.  இருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அங்கு பணியாற்றி வந்த நிலையில் தன்னுடைய காதலியும் மருத்துவருமான குவாரண்டினா தன்னை அறியாமலேயே  தனக்கு வைரஸை பரப்பியதாக தன்னிடம் கூறினார்,  ஏற்கனவே வைரஸ் பீதியில் இருந்த தனக்கு அது ஒருவித பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது,  அந்த ஆத்திரத்தில்  உயிருக்கு உயிராய் நான் காதலித்த குவாரண்டினாவை என கைக்காளால் அவளது கழுத்தை நெறித்து கொலை செய்தேன், உயிர் போகும் நேரத்தில்கூட  அவள் எதையோ சொல்ல முயன்றால் நான் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. என அந்தோனியா வாக்குமூலம் அளித்தார் . 

இதனை அடுத்து  சடலமான குவாரண்டினாவையும் சேர்த்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது ,  ஆனால் அதன்  முடிவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த வழக்கில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது, ஆனால் பாவம் அந்த முடிவை தெரிந்து கொள்ள குவராண்டினாதான்  உயிரோடு இல்லை...  இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று இல்லவே இல்லை என்பதுதான் அந்த முடிவு   இதைக் குறித்த தெரிவித்த  காவல்துறை அதிகாரிகள் என்ன நடந்தது என்று முழுவதுமாக தெரிந்து கொள்ளாமலேயே அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன் காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது  முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர்.  இதனை அடுத்து கொலை குற்றத்திற்காக அந்தோனியாவை  சிறைச்சாலைக்கு அனுப்பினார்.  சிசிலியன் மருத்துவமனையில் முழு ஈடுபாட்டுடன் மருத்துவ பணியாற்றிவந்த குவாரண்டினா  இறப்பதற்கு ஒரு நாள் முன்புவரை  சமூகவலைதளத்தில் கொரோனா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

 

அதில்,  " இத்தாலியில் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு போருக்கு ஒத்தது...  முன்பைவிட இப்போது நம் வாழ்க்கையின் மீதான பொறுப்பையும் ,  அன்பையும், நாம் நிரூபிக்க வேண்டும்.  உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் நாட்டுக்கும்  நீங்கள் மரியாதை காட்ட வேண்டும்...  நோயுற்றவர்களை கவனிப்பதற்காக தினமும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மருத்துவர்களை  நினைத்து நீங்கள் செயல்பட வேண்டும்" என அவர் பதிவு செய்திருந்தார் அவர்” இப்படி ஒரு அற்பணிப்புள்ள மருத்துவரை இத்தாலி அநியாயமாக இழந்துவிட்டதே என இத்தாலி மக்கள் குவாரண்டினாவை எண்ணி நெகிழ்கின்றனர். 

 

click me!