ஒரு பாலஸ்தீனியரை கொல்ல ரூ.3.5 லட்சம் செலவிடும் இஸ்ரேல்! அதிர வைக்கும் தகவல்!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஒரு பாலஸ்தீனியரை கொல்ல இஸ்ரேல்  ரூ.3.5 லட்சம் செலவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
 


Israel spends Rs.3.5 lakh to kill a Palestinian: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக ஹமாஸ் அமைப்பினரும், ஹமாஸ் தாக்கி வருவதாக இஸ்ரேலும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் இஸ்ரேல் 

Latest Videos

இந்நிலையில், காசாவில் நடந்து வரும் நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. அதாவது இஸ்ரேல் அமெரிக்காவுடன் ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 8.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களைப் பெறும்.

நீண்டகால ஒப்பந்தம் 

இஸ்ரேலுக்கு இந்த ஆயுதங்கள் வழங்குவது நீண்ட காலமாக ஒப்பந்தமாக செய்யப்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில ஆயுதங்கள் அமெரிக்க கையிருப்பில் இருந்து இஸ்ரேலுக்கு வழங்கப்படும். ஆனால் பெரும்பாலான ஆயுதங்கள் வழங்க ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீரங்கி குண்டுகள் 

இந்த ஆயுதங்களில் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் 155 மிமீ பீரங்கி குண்டுகள் மற்றும் ஹெல்ஃபயர் AGM-114 ஏவுகணைகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்குகிறது. இது தவிர, 250 கிலோ கொடிய குண்டுகளும் இஸ்ரேலுக்கு வழங்கப்படும். இந்த குண்டுகளை காசா முதல் லெபனான் வரை இஸ்ரேல் பரவலாகப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கை சென்ற பிரதமர் மோடி.. கடும் மழையிலும் பிரம்மாண்ட வரவேற்பால் நெகிழ்ச்சி!

ஒருவரை கொல்ல ரூ.3.5 லட்சம் 

காசாவின் மக்கள் தொகை 21 லட்சத்தை நெருங்குகிறது. இது அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் வாங்கிய ஆயுதங்கள் காசா மக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படுமா? என்ற அச்சத்தை எழுப்புகிறது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் மீது தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஒருவரை கொல்ல  இஸ்ரேல் 3.5 லட்சம் ரூபாய் செலவிடுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

இஸ்ரேல் பிரதமர் சொல்வது என்ன?

அண்மையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவின் பாதியை ஆக்கிரமிப்பதே தங்கள் நோக்கம் என்று கூறினார். இஸ்ரேலிய இராணுவம் இந்த திசை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த ஆயுதங்கள் தொடர்பாக ஈரானின் பங்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க செனட் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி-ஷினவத்ரா சந்திப்பு! இந்தியா-தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

click me!