ஈரானின் அதிரடி ஏவுகணை தாக்குதல்... 200 பயணிகளுடன் நூலிழையில் உயிர் தப்பிய விமானம்..!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதிபர் டிரம்ப் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 200 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், இரு நாடுகளுக்கிடையே உச்சக்கட்ட போர் பதற்றம் ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து, அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதிபர் டிரம்ப் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இந்நிலையில், இந்தியாவின் மும்பை நகரில் இருந்து லண்டன் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈராக் வான்பரப்பில் நுழைந்த விமானம் திடீரென ஏதென்ஸ் வழியாக லண்டன் நோக்கிச் சென்றது. அந்த சமயத்தில்தான், அமெரிக்கா படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 200 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

click me!