ரத்தத்திற்கு ரத்தம்... பழிக்கு பழி...!! வாலாட்டினால் சமாதிதான் , அமெரிக்காவை எச்சரித்த ஈரான்...!!!

By Ezhilarasan Babu  |  First Published Jan 10, 2020, 1:48 PM IST

'' யாரையும்  கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை,   சுலைமானின் படுகொலைக்கு படிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது "  


அமெரிக்க நிலைகளின்  மீதான ஈரானில் தாக்குதல் வெறும் தொடக்கமே என அந்நாட்டின் விமானப்படை தளபதி அமீர் அலி அஜீஸ் தெரிவித்துள்ளார் ,  அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது   மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆரம்பமே எனவும் அவர் கூறியுள்ளார்.  அவரின் இக்கருத்து சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்துள்ளது .  கடந்தவாரம் ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகில் அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.

Latest Videos

இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ஈராக் கூட்டுப் படைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,  இதில் 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது .  இதில் 80 அமெரிக்க ராணுவத்தினர்  கொல்லப் பட்டதாகவும் தகவல் வெளியிட்டது ஈரான்.   இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப்,   ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,   ஆனால் அமெரிக்க இராணுவத்தினர்  யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.  ஈரான் தாக்குதல் நடத்துவதை போல அமெரிக்காவாலும் தாக்குதல் நடத்த முடியும் ,   சக்தி வாய்ந்த அணு ஆயுதம் கொண்ட ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளது என ட்ரம்ப்  எச்சரித்தார் .  இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து பேசியுள்ளார் ஈரான்  ராணுவ தளபதி அமீர் அலி அஜீஸ்,  

'' யாரையும்  கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை,   சுலைமானின் படுகொலைக்கு படிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது "  இனிய அமெரிக்கா மீண்டும் தவறிழைத்தால் ஈரான்  தரப்பிலிருந்து மிக பயங்கரமான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்,  இப்படி  ஒருவரை மாறி ஒருவர்  பதிலடி கொடுத்து வருவது மூன்றாம்  உலகப் போரை  ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .  இதனிடையே அமெரிக்கா ஈரான் விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி  பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது . 

click me!