வெளியே வராதீங்க..சூடானில் வெடித்த வன்முறை..இந்தியர்களுக்கு எச்சரிக்கை - என்ன நடக்கிறது?

By Raghupati R  |  First Published Apr 15, 2023, 7:23 PM IST

துணை ராணுவப் படைகளுடன் ராணுவம் மோதுவதால் சூடானில் உள்ள இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்க நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக மாபெரும் யுத்தம் நடைபெற்று வருகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கிறது. தற்போது பெரும் கலவர பூமியாக மாறியுள்ளது சூடான்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..உங்க பாச்சா எல்லாம் எங்ககிட்ட பலிக்காது.. முடிஞ்சா ரிலீஸ் பண்ணு - அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜெயக்குமார்

இந்த நிலையில், கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறிவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும். உடனடியாக வெளியில் செல்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து அமைதியாக இருங்கள்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பல சுற்று துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்று கூறப்படுகிறது. கார்டூம் விமான நிலையத்திலிருந்து அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தலைநகரின் வடக்கே மெரோவ் விமான நிலையத்தையும் தளத்தையும் கைப்பற்றியதாகவும் துணை ராணுவம் கூறியது.

NOTICE TO ALL INDIANS

IN VIEW OF REPORTED FIRINGS AND CLASHES, ALL INDIANS ARE ADVISED TO TAKE UTMOST PRECAUTIONS, STAY INDOORS AND STOP VENTURING OUTSIDE WITH IMMEDIATE EFFECT. PLEASE ALSO STAY CALM AND WAIT FOR UPDATES.

— India in Sudan (@EoI_Khartoum)

சூடானின் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் ஜனாதிபதி மாளிகை, சூடானின் இராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானின் இல்லம் மற்றும் கார்டூமின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. சூடானின் துணை ராணுவப் படையினரும் இராணுவத்துடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து பல முக்கிய தளங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினர்.

இதையும் படிங்க..19 வயசு தான் ஆகுது.. கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்

இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி

click me!