அமெரிக்க பங்களாவில் சடலமாகக் கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்... நடந்தது என்ன?

Published : Feb 15, 2024, 09:07 AM ISTUpdated : Feb 15, 2024, 09:25 AM IST
அமெரிக்க பங்களாவில் சடலமாகக் கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்... நடந்தது என்ன?

சுருக்கம்

சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இது தற்கொலையாக இருப்பதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தட ஒரு குடும்பமே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அவர்கள் வசித்து வந்த பங்களாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். 9 ஆண்டுகளுக்கு முன்பு ஹென்றிக்கும், ஆலிஸ் பிரியங்காவுக்கும் திருமணமானது. இவர்களுக்கு 4 வயதில் நோவா, நெய்தன் என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஹென்றி மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்கிளல் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்தார். பிரியாங்காவும் ஐ.டி நிறுவன பணியில் இருந்தார்.

2023 ஜூன் மாதம் மெட்டா வேலையை ராஜினாமா செய்த ஹென்றி, நியூ ஜெர்சியின் சான் மேடியோ கவுண்டியில் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களா ஒன்றில் குடியேறினார். இந்நிலையில், அந்த பங்களாவில் ஹென்றி குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் மர்ம்மான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் படுக்கையறையில் இறந்து கிடைத்தனர். ஹென்றியும் பிரியங்காவும் குளியலறையில் சடலமாகக் கிடந்தனர்.

ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை... தங்கத்தை இருப்பு வைக்காத நாடுகள் எதெல்லாம் தெரியுமா?

ஹென்றி மெட்டாவில் இருந்து விலகிய பிறகு Logits என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிகிறது. ஆனால், அதன் நிலை என்ன என்று தகவல்கள் இல்லை. குழந்தைகள் பிறப்பதற்கு முன், 2016ஆம் ஆண்டு டஹென்றி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் அது கைவிடப்பட்டு சேர்ந்தே வசித்து வந்துள்ளனர். அவர்கள் வசித்த பங்களாவை 2020ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர் என்றும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஹென்றி மற்றும் பிரியங்காவின் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் 9mm பிஸ்டல் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது தற்கொலையாக இருப்பதற்கான உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

அண்மையில், மாசசூசெட்ஸில் மற்றொரு பணக்கார இந்திய வம்சாவளி தம்பதியினரும் இதேபோல மர்ம்மான முறையில் இறந்து கிடந்தனர். 5 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்களாவில் அவர்கள் வசித்துவந்தனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே வினோதமான ஒற்றுமை இருப்பது கவனிக்கத்தக்கது.

இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சுக்குள் இரும்பு போல்ட்! பெண் பயணி அதிர்ச்சி!

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!