சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு..!

First Published Nov 21, 2017, 11:42 AM IST
Highlights
indian dalveer bhandari elected as a judge of ICJ


சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் காலியாக இருந்த ஒரு நீதிபதியின் இடத்திற்கு இந்தியவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரிக்கும் பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுகும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் கிறிஸ்டோபர் போட்டியிலிருந்து திரும்பப் பெற்றதை தொடர்ந்து தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியை ஐநாவின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். இதில், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.  நீதிபதி தேர்வில் வெற்றிபெறுவதற்காக, இங்கிலாந்து ஜனநாயமற்ற முறைகளைக் கையாள்வதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.

கடும் போட்டி நிலவிய நிலையில், நீதிபதி தேர்வுக்கான போட்டியிலிருந்து கிறிஸ்டோபரைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்ததை அடுத்து, கிறிஸ்டோபர் போட்டியிலிருந்து விலகினார்.

இதையடுத்து ஐநா பொதுச்சபையில் உள்ள 193 நாடுகளில் 183 நாடுகளின் ஆதரவையும் பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் வாக்குகளையும் தல்வீர் பண்டாரி பெற்றார். இதையடுத்து தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்வானார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 9 ஆண்டுகள் அவர், அந்த பதவியில் நீடிப்பார்.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வாகியுள்ள தல்வீர் பண்டாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

click me!