#UnmaskingChina: எல்லையில் மின்னல் வேகத்தில் கட்டமைப்பு..!! உச்சகட்ட கலக்கத்தில் சீனா..

By Ezhilarasan Babu  |  First Published Jun 23, 2020, 11:44 AM IST

இந்தியாவில் எல்லை சாலைகள் அமைப்பதை பொருத்தவரையில் 2018-2017 மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆண்டுக்கு 230 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்திய-சீன எல்லையில் இருநாடுகளும் படைகளைக் குவித்துவரும் நிலையில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற கட்டுமான பணிகள் எந்தவித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெறும் என இந்தியா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் நடந்த மோதலுக்குப் பின்னர் இருநாடுகளுக்கும் இடையேயான  பதற்றத்தை தணிப்பதற்காக, இரு தரப்பினருக்கும் இடையில்  மால்டோவாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் எல்லைப்பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து எல்லை மேலாண்மை செயலாளர் சஞ்சீவ் குமார் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக அவர் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கட்டமைப்பு பணிகளை அவர் ஆய்வு செய்துள்ளார். இந்திய எல்லைப் பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு சாலைகளை அமைத்து வருகிறது,  தனது எல்லையில் ஏற்கனவே சீனா சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவும் தனது எல்லையில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எல்லையில் படைகளை குவித்து  சீனா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. சாலை கட்டமைப்புகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்தியா எல்லையில் சாலைகளை அமைத்துவிட்டால், இந்தியாவால் ராணுவ தளவாடங்களை விரைவில் எல்லைக்கு கொண்டு வர முடியும் என்பதால் சீனா இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்திய காலங்களில் கல்வான் பள்ளத்தாக்கு வழியாக ஷியோக்கை அடையும் லடாக் பிராந்தியத்தில் இந்தியா சாலை கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா டி.எஸ்.டி.பி.ஓ சாலையை அமைக்கும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருவதால் அது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா அதை எந்த தொய்வும் இன்றி கட்டி முடிப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.  எல்லையில் சாலைகளை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், வடக்குத் தொகுதியில் எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் சி.பி.டபிள்யு.டி அதிகாரிகள் எல்லையில் உள்ள உட்கட்டமைப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில், நவீன கட்டுமான உபகரணங்கள் வாங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.  பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்தியா கடந்த 6 ஆண்டுகளில் 4,764 கிலோமீட்டர் பிரதான சாலை கட்டமைப்புகளை நிறைவு செய்துள்ளது.

 

இந்தியாவில் எல்லை சாலைகள் அமைப்பதை பொருத்தவரையில் 2018-2017 மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆண்டுக்கு 230 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது 2017-2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 470 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுரங்கப்பாதை கட்டுமானத்தை பொறுத்தவரை 2008-14 ஆம் ஆண்டில் ஒரே ஒரு சுரங்கப்பாதை மட்டுமே முடிக்கப்பட்டது. தற்போது மேலும் 6 சுரங்கப்பாதைகளுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 19 சுரங்கப்பாதைகளை அடுத்த ஆறு ஆண்டுகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. பாலங்கள் அமைப்பதன் மூலம் எல்லை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தோ-சீனா எல்லையில் தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் சுமார் 14 ஆயிரத்து 450 மீட்டர் பாலங்கள்  அமைத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.  மேலும் இந்த பணிகளை தொடர 16800 கோடிக்கு அதாவது எல்லை அபிவிருத்திக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எல்லையில் இந்தியாவின் கட்டமைப்புகளை  சீனா எதிர்த்துவரும் நிலையில், இந்தியா தனது கட்டமைப்புகளை ஒருபோதும் நிறுத்தாது என இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!