எல்லையில் சீனாவை ஓட ஓட விரட்ட பாங்காங் ஏரி அருகே இந்தியாவின் புதிய திட்டம்!!

By Dhanalakshmi G  |  First Published Jun 8, 2023, 3:52 PM IST

இந்தியா, சீனா எல்லையில் எப்போதும் எல்லைத் தகராறு இருந்து வருகிறது.
 


இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே எல்லையில் யாரும் ரோந்து செல்லக் கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதி இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் பஃபர் சோன் என்று அழைக்கிறோம். இங்கு இரண்டு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து செல்லக் கூடாது. இடங்களை ஆக்கிரமிக்கக் கூடாது. ஆனால், இந்த இடத்தை சீனா குறிவைத்து செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக பாங்காங் ஏரி அருகே வலது பக்கம் இந்தியாவுக்கு என்று சாலை வசதிகள் எதுவும் இல்லை. சீனா எளிதாக உள்ளே நுழைவதாக இருந்தாலும், இவர்களை எதிர்கொள்ளவேண்டும். ராணுவ தளவாடங்களை நகர்த்தி செல்ல வேண்டும். பிங்கர் 1, 2க்கு செல்வதற்கு தொடர்பு இல்லாமல் இருக்கிறது. தற்போது இங்கு சாலை வசதியை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

எல்லையில் லுகுங்-கில் இருந்து சார்ட்ஸ்சே என்ற இடத்திற்கு சுமார் 38 கி.மீட்டர் தொலைவிற்கு செல்வதற்கு சாலை அமைக்கப்படுகிறது. இது பாங்காங் ஏரியின் வலது பக்கமாக அமைய இருக்கிறது. இத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதலை உருவாக்கி வரும் ஹாட் ஸ்பிரிங் பகுதிக்கு செல்லும் தூரத்தை இந்த சாலை குறைக்கும்.

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு 'டச்சு நோபல் பரிசு'! அறிவியல் உலகின் உயரிய விருது!

இந்த சாலை 30 மாதங்களுக்குள், 154 கோடி நிதியில் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் செல்லும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. நெடுஞ்சாலை தரத்தில் அமைக்கப்படுகிறது. 

பாங்காங் ஏரியின் எல்லையில் மேற்கு திசையில் இருக்கிறது லுகுங் ஏரி. பிங்கர் 1 அருகே சார்ட்ஸ்சே அமைந்துள்ளது. இது பாங்காங் ஏரியின் வலது பக்கத்தில் உள்ளது. இங்குதான் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்னர் பாங்காங் ஏரியின் வலது பக்கமாக செல்வதற்கான தொலைவு மூன்றில் இருந்து இரண்டாக குறையும். தற்போது லுகுங் பகுதியில் இருந்து சார்ட்ஸ்சே பகுதிக்கு செல்வதற்கு ஒன்றரை மணி நேரமாகிறது. சாலை அமைக்கப்பட்டு விட்டால், இந்த தொலைவு 30 நிமிடமாக குறையும். இதுமட்டுமின்றி ஹாட் ஸ்பிரிங்க்ஸ் பகுதிக்கு செல்வதற்கான தூரமும் குறையும் என்பது தெரிய வந்துள்ளது. 

2030க்குள் உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு மின்சாரம் கிடைக்காதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

இதுமட்டுமின்றி எல்லைக்கு அருகில் இந்தியா மேலும் இரண்டு பாதுகாப்பு கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. எல்லைக்கு அருகில் உள்ள லடாக்கில் 145 கிமீ தொலைவிற்கு சுஷுல்-துங்டி-ஃபுக்சே-டெம்சோக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நியோமாவில்  விமானநிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சீனா தன்னுடைய எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவின் கட்டமைப்புகள் அமையும். லடாக்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையத்தில் போர் விமானங்கள் நிறுத்தப்படும். இது மிகவும்  உயரமான இடத்தில் அமைய இருக்கிறது.  

click me!