பாகிஸ்தான் பிரதமர் Shahid Khaqan Abbasi – யின் புதிய அமைச்சரவை… இந்து மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இடம்…

 
Published : Aug 06, 2017, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
பாகிஸ்தான்  பிரதமர் Shahid Khaqan Abbasi – யின் புதிய  அமைச்சரவை… இந்து மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இடம்…

சுருக்கம்

in pakistan ministry one hindu menber participated

பாகிஸ்தானின் புதிய பிரதமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள Shahid Khaqan Abbasi -யின் அமைச்சரவையில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இடம்பெற்றுள்ளது இந்திய மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பனாமா பேப்பர் ஊழல் வழக்‍கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தகுதிநீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து பிரதமர் பதவியை ஷெரீஃப் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாகிஸ்தானின் இடைக்‍காலப் பிரதமராக அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் ககான் அப்பாஸி கடந்த செவ்வாக்கிழமை அன்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் புதிய அமைச்சரவையில் அந்நாட்டின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த Darshan Lal என்பவர் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவரான Lal, பாகிஸ்தானின் Sindh மாகாணாத்தை சேர்ந்தவர் ஆவார். ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு 2-வது முறையாக உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

துருக்கியில் விமான விபத்து: லிபியா ராணுவத் தளபதி உள்பட 5 பேர் மரணம்!
இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!