இப்படியொரு அம்மாவா! காதலனுடன் ஓடிய தாய்.. 9 வயது சிறுவனின் சோக கதை..!!

By Kalai Selvi  |  First Published Jan 26, 2024, 8:37 PM IST

கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் தனியாக வாழ்ந்த ஒன்பது வயது சிறுவனின் சோக கதை..


பொதுவாகவே, குழந்தையை வீட்டில் தனியாக விட முடியாது என்பதால் பல பெண்கள் தங்கள் தொழிலை விட்டுவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு பதினைந்து இருபது நிமிடம் குழந்தைகளை வீட்டில் தனியே வைத்திருந்தாலும் டென்ஷன் தான் அவர்களுக்கு. 

இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தங்கள் குழந்தையை பற்றி எப்போதுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக குழந்தையை விட்டு சென்றாலும், ஒரு நாள் முழுவதும் அல்லது இரவு முழுவதும் வீட்டில் அவர்களை தனியாக விடுவதில்லை. குழந்தைகளுடன் எப்போதும் யாராவது இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு தாய் செய்த செயல் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் உண்மையிலேயே குழந்தையைப் பெற்றேடுத்த தாயா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு கேள்வியாக எழுந்துள்ளது. வாங்க அப்படி என்ன நடந்தது என்று தெரிஞ்சிகலாம்..

Tap to resize

Latest Videos

பிரான்ஸின் நெர்சாக் நகரில், 9 வயதுடைய சிறுவன் தனது வீட்டில் தனியாக கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருகிறான். அவனது தாய் தனது மகனை விட்டுவிட்டு தனது காதலனுடன் சென்று விட்டாராம். அந்த சிறுவனுடன் அவனது பாட்டி, தாத்தா, தந்தை உட்பட யாரும் வசிக்கவில்லை. அந்த சிறுவனின் பெயர் அண்ட்ரோ.

அண்ட்ரோவுக்கு 7 வயதாக இருந்தபோது, அவனது தாய் அவனை இங்கே விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அண்ட்ரோ மிக குறைந்த பட்ஜெட் வீட்டில் வசிக்கிறான். கடந்த இரண்டு வருடங்களாக அண்ட்ரோ இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் உணவை உண்டு வாழ்கிறாராம். அண்ட்ரோவின் தாய் தனது காதலனுடன் அவன் வசிக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறார். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தன் மகனைப் பார்க்க இங்கு வருவாராம். அவர் வரும்போது சாப்பிடுவதற்கு உணவு கொண்டு வருவாராம். அதுவும் அரிதாகவே சென்று வருவதால் சிறுவன் எப்பொழுதுமே தனிமையில் இருந்து வந்துள்ளான்.

இதனால் அக்கம் பக்கத்தினர் இது குறித்த தகவலை போலீசாருக்கு கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் ஆண்ட்ரோவின் வீட்டிற்கு சென்று ஆண்ட்ரோவுக்கு உடுத்த சரியான உடையும், உண்ண உணவும் இல்லாததைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தனர். பிறகு வந்த போலிஸிடம் தனது தனது நிலைமையை எடுத்துக் கூறினான். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் ஆன்ட்ரோவின் தாயை கைது செய்தனர். ஆனால், நீதிமன்ற வழக்கின் போது ஆன்ட்ரோவின் தாய் தன் மீது இருக்கும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. தினமும் என் மகனைச் சந்தித்து பள்ளிக்கு அனுப்புகிறேன் என்று வாதிட்டார். அக்கம்பக்கத்தினர் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார். 

ஆனால் அவரது மகன் மற்றும் அண்டை வீட்டாரின் வார்த்தைகள் மற்றும் வீட்டில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் சிறுவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. குழந்தையை தனியாக விட்டுவிட்டு காதலனுடன் வாழ்ந்த தாய்க்கு நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனை விதித்தது.

click me!