நாஜி சின்னம் பதித்த ஹிட்லரின் தொலைபேசி ரூ.2 கோடிக்கு ஏலம்;

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
நாஜி சின்னம் பதித்த ஹிட்லரின் தொலைபேசி ரூ.2 கோடிக்கு ஏலம்;

சுருக்கம்

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய நாஜி சின்னம் பதித்த தொலைபேசி ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இரண்டாவது உலகப் போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தவர். இவர் தனிப்பட்ட முறையில் டெலிபோனை பயன்படுத்தினார்.

இந்த டெலிபோன் சிவப்பு நிறமுடையது. இரண்டாம் உலகப்போரின் போது இதன் மூலம் தான் ஹிட்லர் தனது உத்தரவுகளை, பிறப்பித்தார். இதனால், பேரழிவுகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

அத்தகைய டெலிபோன் கடந்த 1945-ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போரின் முடிவில் ஜெர்மனி சரண் அடைந்த பிறகு சோவியத் ரஷ்ய வீரர்கள் அதை மீட்டு இங்கிலாந்து பிரிகேடியர் சர் ரால்ப் ராய்னரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தொலைபேசியில் நாஜி கட்சியின் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசியின் அடிப்பக்கத்தில் ஹிட்லரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த டெலிபோன் அமெரிக்காவின் மேரி லேண்டில் உள்ள செசாபீக் நகரின் அலெக்சாண்டர் மையத்தில் ஏலம் விடப்படுகிறது.

குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.67 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.2 கோடி வரை ஏலம் போகலாம்.

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!