அமெரிக்காவுக்கு வந்த பயங்கர ஆபத்து..?? அவசர அவசரமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை ..!!

By Ezhilarasan Babu  |  First Published Nov 27, 2019, 12:03 PM IST

இந்நிலையில் சிறிய ரக விமானம் ஒன்று தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்துள்ளது.  இதனால் வெள்ளை மாளிகையின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  இதனையடுத்து போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. 


மர்ம விமானம் ஒன்று அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பகுதியில் பறந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உடனடியாக மூடப்பட்டுள்ளது .  உலகின் வல்லரசான அதி பாதுகாப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது அமெரிக்கா . பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் முதலிடத்தில் இருக்கும் அதே நேரத்தில் தீவிரவாத அச்சுறுத்தலிலும் அமெரிக்காவேமுதலிடத்தில்உள்ளது. 

Latest Videos

கடந்த 2001ஆம் ஆண்டு பென்டகன் என்னும் (வர்த்தக மையம்) இரட்டைக் கோபுரத்தை தீவிரவாதிள்  வெடிபொருள் நிரப்பிய விமானத்தால் மோதி  தரைமட்டமாக்கினர்அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.  அது அமெரிக்காவின் கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகின் நாட்டாமையான அமெரிக்காவுக்கு அன்று முதல் தன் நாட்டின் பாதுகாப்பில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது.  இரட்டை கோபுர தாக்குதலுக்கு  பின்னர் பாதுகாப்பு விவகாரத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக வெள்ளை மாளிகைக்கு மேல் அனுமதியின்றி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சிறிய ரக விமானம் ஒன்று தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்துள்ளது.  இதனால் வெள்ளை மாளிகையின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  இதனையடுத்து போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. 

அந்த  விமானம் யாருடையது.?  எங்கிருந்து வந்தது.? என்பது குறித்து பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது .  இது குறித்து அந்நாட்டின் உளவுத்துறை தீவிரமாக விசாரித்துவருகிறது.  தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடும் என்பதால்  வெள்ளை மாளிகை  தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுவரையில் அந்த மர்ம விமானம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை

click me!